மேலும் அறிய

இரண்டே நாள்.. 19 பேர்.. 30 லட்சம் அபேஸ்.. புதுச்சேரியில் விதவிதமாக ஏமாற்றிய சைபர் குற்றவாளிகள்..!

புதுச்சேரி : கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி : கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்தனர்.

இணைய வழி மோசடி:

புதுச்சேரி அருகே உள்ள மூலகுலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி 9 லட்சத்து 13 ஆயிரத்து 274 ரூபாய் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமாந்த மக்கள்:

ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அனிதா என்பவர் டோல் DOLE என்ற MLM நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே நாளிலேயே பணம் இரட்டிப்பாக கொடுக்கிறார்கள் என்று 5,72,26 ரூபாயை முதலீடு செய்து பிறகு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வராததால் ஏமாற்றத்தை கண்டு இணை வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

இதே டோல் என்ற நிறுவனத்தின் பெயரை வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்டோர் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஏமாந்ததாக புகார் இருக்கின்றது அது சம்பந்தமாக அனைத்து பத்திரிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்று பணத்தை பொதுமக்கள் இழக்கின்றனர்.

டாஸ்கை முடித்தால் இரட்டிப்பாக பணம் 

புதுச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் நாங்கள் கொடுக்கின்ற டாஸ்கை நீங்கள் செய்து முடித்தால் உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கொடுக்கிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி 4,64,000 பணத்தை அனுப்பி அந்த பணம் அவருக்கு திரும்ப வரவில்லை என்ற பிறகு அது சமமாக புகார் கொடுத்துள்ளார்.

வாண்ட்ரப்பேட்  பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் இணைய வழியில் சம்பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று வாட்ஸ் அப்பில் வந்த தகவலை எடுத்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பிறகு பணத்தை எடுக்க முடியாததால் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லைக் செய்தால் பணம்:

நெல்லிதோப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நாங்கள் அனுப்புகின்ற வீடியோக்களை பார்த்து நீங்கள் லைக் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லி முதலில் ஒரு சிறிய பணத்தை அனுப்பி இதேபோன்று நீங்களும் முதலீடு செய்யுங்கள் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்திய பிறகு அவர்களிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணத்தை மீட்க இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஏணம், ஈஸ்ட் கோதாவரி  பகுதியை சேர்ந்த தீபக் குமார்  என்பவர் இணைய வழியில் முதலீடு செய்வதால் அதிக பணம் கொடுக்கிறோம் என்று சொன்னது நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து தன் பணத்தை எடுக்க முடியாததால் அவருடைய புகார் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருபுவனை பகுதியை சேர்ந்த அருண் என்பவர் வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை வங்கி கணக்கு எண்ணை மாற்றி நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி விட்டார் அதை மீட்க வேண்டி அவர் கொடுத்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பான் கார்டு அப்டேட் மோசடி:

முத்தியால்பேட்டை பிரபாகரன் என்பவர் உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்கிறோம் என்று கூறிய நபரிடம் அவருடைய விவரங்கள் அனைத்தையும் சொன்ன பிறகு அவர் வங்கி கணக்கில் இருந்த 24 ஆயிரத்து 986 ரூபாய் எடுத்து விட்டனர் என்பது சம்பந்தமாக புகார் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது பற்றி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் மற்றும் இணைய வழி ஆய்வாளர்கள் கார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஆகியோர் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இணைய வழியில் வருகின்ற எந்த தகவலையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 15க்கும் மேற்பட்ட நபர்கள் இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்கி பணத்தை இழக்கின்றனர் என்று பல்வேறு தளங்கள் மூலமாக குறிப்பாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக மேலும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தும் இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

காவல்துறை எச்சரிக்கை:

ஆகவே பொதுமக்கள் இணைய வழியில் வருகின்ற எந்த வேலை வாய்ப்பு, முதலீடு, பணம் இரட்டிப்பாக தருகிறோம், குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம், பழைய பொருட்கள் மிக குறைந்த விலையில் தருகிறோம், போன்ற எந்த ஒரு இணைய வழி அழைப்பையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 

Aadi Krithigai 2023: புதுச்சேரி கவுசிக பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்

Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!

துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்

புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget