மேலும் அறிய
Advertisement
சென்னையில் காதலியை ரயில் முன் தள்ளிவிட்ட காதலன்.....காரணம் என்ன..?
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷ் மற்றும் சத்தியா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் சதீஷ் மற்றும் சத்தியா ஆகிய இருவரின், நட்பானது படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சத்தியா மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் எப்பொழுதும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சந்திப்பது வழக்கம். வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.
அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் உடனடியாக சதீஷை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் சதீஷ் அங்கிருந்து பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சதீஷ் மற்றும் சத்தியா ஆகிய இருவரும் சம்பவம் நடைபெற்ற பொழுது, இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷ் என்பவரை வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion