மேலும் அறிய
Advertisement
'போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் துவங்கி நடிகைகளின் ஆபாச நடனம் வரை ஈசிஆர் உள்ள ரெசார்டுகளில் தங்கு தடையின்றி நடக்கிறது
கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னை திருவான்மியூரில் தொடங்கி, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை தாண்டி நாகப்பட்டினம் வரை செல்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிக அளவு ரெசார்ட்கள் உள்ளன . அவற்றில் பெரும்பாலான விடுதிகளில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக பல சொகுசு விடுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை இரவுகளில் ஆபாச நடனங்களுடன், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல போதை வஸ்துகளுடன் பார்ட்டி நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் ஆபாச விருந்துகளில் நடிகைகள் முதல் பல்வேறு பெண்கள் ஆபாச நடனங்கள் ஆடுவது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவது, ஆகியவை தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொகுதிகளில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
கடலோரம் கட்டபட்ட அழகிய சொகுசு விடுதி, கடற்கரையோரத்தில் மதுவிருந்து, உள்ளிட்டவை இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை தூண்டி விடுகின்றன. இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் முதலைகள் பல ஆயிரம் ரூபாய்களை அவர்களிடம் கறந்து விடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு நடைபெறும் விருந்துகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம், திருமண விழா கொண்டாடுகிறோம் உள்ளிட்ட காரணங்களை கூறி சட்டவிரோத செயலில் ஈடுபடுகின்றனர். சொகுசு விடுதி உரிமையாளர்கள் பணம் வருகிறது என்ற ஒற்றை காரணத்தால் இதை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார்கள்.
சொகுசு விடுதிகள் இவ்வாறு நடைபெறுகிறது என்றால், தங்களுடைய சொந்த தேவைக்காக பண்ணை வீடுகளை கட்டிவிட்டு, இதுபோன்ற விருந்துகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். இது போன்ற பண்ணை வீடுகளில் நடைபெறும் பார்ட்டிகளில் எல்லை மீறும் செயல்கள் பலவும் நடைபெறுகிறது. மொத்தமாக ஒரு பண்ணை வீட்டை புக் செய்து விடுவதால், பார்ட்டியில் கலந்து கொள்பவர்களை தவிர வேறு யாரும் அங்கு இருக்க போவதில்லை என்பதாலும் , உயர்ரக போதைப்பொருட்களில் துவங்கி, ஆபாச குத்தாட்டங்கள் வரை எல்லை மீறுகிறது. இவ்வாறு நடைபெறும் ஆபாச நடனங்களில் நடனமாடும் பெண்களின் மீது பணம் மழை பொழிவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இது போன்ற விருந்துகள் இளைஞர்களைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது.
மென்பொருள் பணியாளர்கள், வசதி படைத்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர், இவ்விருந்தில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கலந்து கொள்கின்றன. இவ்வாறு நடைபெறும் விருந்திற்கு சமூக வலைதளம் மூலம் விளம்பரங்கள் செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் பணம் கொடுத்து இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்றால், மறுபுறம் பணத்திற்கு ஆசைப்பட்டு , ஆபாச நடனம் ஆடும் பெண்களின் கதை இன்னும் மோசம்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கூட மகாபலிபுரம் அருகே சட்டவிரோதமான விருந்து நடைபெற்ற பொழுது, காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி 75 க்கும் மேற்பட்ட இருபாலர் இளைஞர்களை கைது செய்து, அவர்களை எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், விருந்து நடந்த சொகுசு விடுதிக்கு சீல் வைத்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு பொது முடக்கம் அமலில் இருந்ததால், சொகுசு விடுதிகள் ஆகியவை மூடப்பட்டிருந்த காரணத்தினாலும். இது போன்ற விருந்துகள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில் அவை மீண்டும் தற்பொழுது தலைத்தூக்க துவங்கியுள்ளன. கடந்த சனிக்கிழமை ஒரு ரிசார்ட்டில் மதுவிருந்து நடத்திய 16 பெண்கள் உட்பட 31 பேர் சிக்கி உள்ளனர். இதில் காதலன் படத்தில் போலீசாக நடித்த கவிதாஸ்ரீயும் அடக்கம்.
ன்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள சொகுசு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த சொகுசு பண்ணை வீடுகளில் கடந்த சனிக்கிழமை இரவு ஆண்கள், பெண்கள் என 30- க்கும் மேற்பட்டோர், கலந்துகொண்ட மது விருந்து நடைபெற்று வருவதாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இது குறித்து தகவலின் பேரில், கானத்தூர் போலீசார் சென்றபோது அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் மது விருந்து நடைபெற்று கொண்டிருந்ததை கானத்தூர் காவல் துறையினர் உறுதி செய்தனர்.
அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன், போலீசார் செல்லும்போது இணைந்து நடனமாடி கொண்டிருந்தனர். அதனை பார்த்து அதிர்ந்த காவல்துறையினர் மது விருந்தை தடுத்து நிறுத்தினர். மேலும், மது விருந்து நடத்திக்கொண்டு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அங்கிருந்த பெண் ஒருவர் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
மேலும், மது விருந்துக்கு சினிமா நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஜித்குமார் (34) என்பவருடன் இணைந்து, இந்த இரவு நேர மது விருந்து பார்ட்டியை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர், இந்த மது விருந்து பார்ட்டியில் நடனமாடிய பெண்கள் மற்றும் நடிகை கவிதா ஸ்ரீ உடன் சேர்த்து மொத்தம் 16 பேரையும் கடுமையாக எச்சரிக்கை செய்து பண்ணை வீட்டிலிருந்து அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மது விருந்தில் கலந்து கொள்வதற்கு, இன்ஸ்டாகிராம் செயலி மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, அதில் கலந்து கொள்ளும் ஆண் ஒருவருக்கு ரூ.5000 முதல் பத்தாயிரம் வரை வரை கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது.
பின்னர், அங்கிருந்த ஸ்ரீ ஜித்குமார் உள்ளிட்ட 15 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து, அவர்கள் மீது ஊரடங்கின் போது அரசு உத்தரவை மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பன்ணை வீட்டில் மது விருந்து நடத்தியது என 4 பிரிவின் கீழ் வழக்குகள் பதியபட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கலை செல்விக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி நேற்று பன்ணை வீட்டை பூட்டி சீல் வைத்தார்.
இவ்வாறு, மீண்டும் தலை தூக்கி உள்ள இந்த ஆபாச விருந்துகள் நடைபெறாமல் இருக்கவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தாமல் இருக்கவும், காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். மது விருந்தில் பங்கேற்குவிட்டு, நிதானம் இல்லாமல் ‘சொகுசு’ கார்களை ஓட்டிச்செல்வதால், பலர் காயமடைந்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதில், உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழியாமல் இருக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.
இளைஞர்களும் தங்களுடைய தனிமனித ஒழுக்கத்தை முறையாக கடைபிடித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது !
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion