Hyderabad : நெற்றியில் குங்கும பொட்டு.. கவிழ்ந்து இருந்த சாமி போட்டோஸ்.. மர்ம முறையில் இறந்துகிடந்த குடும்பம்..!
அனைவரது நெற்றியிலும் குங்கும பொடியால் கோடுகள் வரையப்பட்டு, வீட்டின் தரையில் கடவுள்களின் புகைப்படங்கள் திரும்பியநிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.
ஹைதராபாத் அருகே அமீன்பூரில் பணிபுரிந்து வந்த எம்என்சி ஊழியர் ஸ்ரீகாந்த் கவுட், ஆசிரியையான அவரது மனைவி அனாமிகா மற்றும் அவர்களது 7 வயது மகள் ஸ்னிக்தா ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 20 ம் தேதி அந்த குடும்பம் தங்கியிருந்த வீடு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து சோதனை மேற்கொண்டத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
மேலும், அனைவரது நெற்றியிலும் குங்கும பொடியால் கோடுகள் வரையப்பட்டு, வீட்டின் தரையில் கடவுள்களின் புகைப்படங்கள் திரும்பியநிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இது அமானுஷ்ய சடங்கு மரணம் என்று காவல்துறையினர் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், அந்த குடும்பம் அந்தளவுக்கு மதவாதிகள் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அந்த குடும்பத்தின் அண்டை வீட்டாரான பெண் ஒருவர் கூறுகையில், “அந்த தம்பதிகள் இருவரும் நன்றாகப் படித்தவர்கள். உண்மையில், அனாமிகாதான் யாருக்கேனும் பிரச்சனைகள் என்றால் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவார். அவரது கணவரும் மிகவும் பகுத்தறிவு கொண்டவர். அந்த பெண்ணுக்கும் பெரிதாக மூடநம்பிக்கை இல்லை. யாருக்கேனும் தெளிவு மற்றும் வாழ்க்கைக்கான அணுகுமுறை வேண்டும் எனில் நாங்கள் அனாமிகாவிடம் தான் ஆலோசனை பெறுவோம் " என்றார்.
ஸ்ரீகாந்த் எம்என்சி நிறுவனத்தில் சாப்ட்வேர் ஊழியராக பணிபுரிந்த நிலையில், அனாமிகா கார்ப்பரேட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மாலையில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சந்தேகிக்கப்படுகிறது. பெற்றோரின் அழைப்புக்கு அவர்கள் பதிலளிக்காததால், கவலையடைந்த குடும்பத்தினர் அவர்களது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு பயந்துபோன குடும்பத்தினர் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து, போன் சுவிட்ச் ஆஃப் என வந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து, காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், குற்றம் நடந்த இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. தடயங்கள் எதுவும் கிடைக்காததால், இந்த வழக்கில் முன்னேற்றம் காண போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்துள்ளனர். மேலும், குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்