‛கள்ளக் காதலை போட்டுக்கொடுத்துடுவேன்’- கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் காதலனுடன் தற்கொலை முயற்சி!
ஹைதராபாத்தில் தகாத உறவில் இருந்த பெண்ணை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் தகாத உறவில் இருந்த பெண்ணை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் அவரது காதலருடன் தற்கொலைக்கு முயற்சி செய்ததையடுத்து இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.
ஹைதராபாத் எஸ்.ஆர்.நகர் பகுதியில் இந்த சம்பவம் டிசம்பர் 13ஆம் தேதியன்று நிகழ்ந்துள்ளது. தற்கொலை முயற்சிக்கு பின் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் எஸ்.ஆர்.நகரை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். ஏற்கெனவே திருமணமான இவர், அவருடன் வேலைப்பார்க்கும் மற்றொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு தெரியவந்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அந்த பெண் வழக்கம்போல் தனது கள்ளக்காதலனை பார்க்க புறப்பட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் உள்ளிட்ட 2 பேர் அந்த பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தை அந்த பெண்ணின் வீட்டில் தெரிவித்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து அவ்வாறு வீட்டில் சொல்லக்கூடாது என்றால் ஆசைக்கு இணங்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் மறுக்கவே, இரண்டு பேரும் அந்த பெண்ணை வலுக்காட்டாயமாக யாரும் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது காதலருடன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயங்கி விழுவதற்கு முன் அந்த பெண்ணின் காதலர் இதுகுறித்து உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர்கள் உயிர்தப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.
பக்கத்து வீட்டுக்காரர்களே பெண்ணை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்