பெண்ணை அடித்து உதைத்த ஆட்டோ டிரைவர்..! குத்திக்கொன்ற மர்மநபர்கள்...! என்ன நடந்தது?
கள்ளக்காதலியை அடித்து துன்புறுத்திய ஆட்டோ டிரைவரை மர்மநபர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
ஹைதரபாத்தின் மௌலா அலி பகுதியில் உள்ள ஆர்.டி.சி. காலனியில் வசிப்பவர் சிலுக்கா ராஜேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் தனது நண்பர்களை பார்ப்பதற்காக ஓரிரு தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவர் வடக்கு லாலாகுடா பகுதியில் உள்ள சாந்திநகரில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்களால் மறைக்கப்பட்டார்.
ராஜேஷை மறித்த அந்த மர்மநபர்கள் சரமாரியாக கத்தியால் ராஜேஷை குத்தினர். இதனால், சம்பவ இடத்திலே ராஜேஷ் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலே உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராஜேஷ், கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர் என்று தெரியவந்தது. திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த ராஜேஷ் அந்த பெண்ணின் கணவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2020ம் ஆண்டு சிறைக்கு சென்றார். இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம்தான் ராஜேஷ் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
விடுதலையான ராஜேஷ் தனது கள்ளக்காதலியை சந்தித்து பழகிவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தனது கள்ளக்காதலியை ராஜேஷ் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தனது கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சூழலில்தான், ராஜேஷ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் தப்பியோடி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லது ராஜேஷின் கள்ளக்காதலியின் கணவர் கொல்லப்பட்டதற்காக இந்த கொலை பழிவாங்கும் படலமாக நடைபெற்றதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : கடற்கரையில் செல்லப் பிராணியுடன் எஞ்ஜாய் பண்ணும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும்..
மேலும் படிக்க : Breaking News: கொரோனா தடுப்பு மருந்து இயக்கம் ஓராண்டு நிறைவு- சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது
மேலும் படிக்க : புதுச்சேரி : காணும் பொங்கலுக்கு மக்கள் கூடும் சுற்றுலா தளங்கள் களையிழந்தன.. கண்காணிப்பில் போலீசார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்