Breaking News: கொரோனா தடுப்பு மருந்து இயக்கம் ஓராண்டு நிறைவு- சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது
இன்றறைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ தேவைகள் மற்றும் அவசர தேலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள், பால் மற்றும் பத்திரிகை வினியோகம், ஏடிஎம். மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை ஏழு மணி முதல் இரவு 10 மணிவரை பார்சல் சேவைகளை வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பிரதமர் மோடி வாழ்த்து
At the same time, the role of our doctors, nurses and healthcare workers is exceptional. When we see glimpses of people being vaccinated in remote areas, or our healthcare workers taking the vaccines there, our hearts and minds are filled with pride.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோரை எண்ணி பெருமிதம் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு- சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது
நாட்டில் கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து இயக்கம் தொடங்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து இயக்கமான இந்த இயக்கம் கடந்த ஆண்டு இதேநாளில், தொடங்கப்பட்டது.
இதையொட்டி, புதுதில்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட உள்ளார். நாடு முழுவதும் இதுவரை 156 கோடி டோஸ். கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஓட்டுநர் அருகே காற்றுப் பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியது
ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1 அன்று அல்லது அதற்குப் பின் தயாரிக்கப்பட்ட எம் 1 வகை (ஓட்டுநர் இருக்கையோடு 8 இருக்கைகளுக்கும் அதிகமில்லாத பயணிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தும் மோட்டார் வாகனங்கள் ) மோட்டார் வாகனங்கள் அனைத்திலும் ஓட்டுநர் அருகே காற்றுப் பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியது.
டாக்டர்' எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது
முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர்' எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவினைப் போற்றுகின்ற வகையில் அன்னாரின் 105-வது பிறந்த நாளானது (ஜனவரி17) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல் - கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், முழு ஊரடங்கு காரணமாக கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.