Son Stay Mother DeadBody: அழுகிய நிலையில் தாயின் சடலம்! 3 நாட்களாக மறைத்த மகன்?
தெலங்கானாவில் உயிரிழந்த தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 22 வயது மகன் தங்கியிருந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் உயிரிழந்த தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 22 வயது மகன் தங்கியிருந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹைதராபாத். இங்கு வசித்து வந்தவர் விஜயா. 50 வயதாகிய அவர் அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் தனது மகனுடன் வசித்து வந்தார். அவருடைய மகனுக்கு 22 வயதாகிறது. அவரது மகனுக்கு மன நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக விஜயாவை அவரது அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. விஜயா வசித்து வந்த வீட்டில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மல்கஜ்கிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு விஜயா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அருகே அவரது மகன் இருந்துள்ளார். இதைக்கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் விஜயாவின் அழுகிய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மனநலம் பாதிக்கப்பட்ட அவரது 22 வயது மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த விஜயா வசித்து வந்த குடியிருப்பில் வசித்து வரும் சிலர், விஜயாவை அவரது மகனே கொலை செய்திருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் விஜயாவின் மரணம் இயற்கையானதா? அல்லது அவர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் போலீசார் தங்களது அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். உயிரிழந்த தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மூன்று நாட்கள் தங்கியிருந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : உப்பு கேட்டு கழுத்தில் கத்தி வைத்த நபர்... புரூஸ்லியாக மாறி புடைத்து விரட்டிய பெண்... கோவையில் ‛கொலை மாஸ்’
மேலும் படிக்க : அக்கா உடன் தகாத உறவு... திமுக பிரமுகரை ‛பீஸ்’ போட்ட தம்பி... துண்டாக்கப்பட்ட உடல் பாகங்கள் பறிமுதல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்