மேலும் அறிய
Advertisement
அக்கா உடன் தகாத உறவு... திமுக பிரமுகரை ‛பீஸ்’ போட்ட தம்பி... துண்டாக்கப்பட்ட உடல் பாகங்கள் பறிமுதல்!
சென்னை இராயபுரத்தில் பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் திமுக பிரமுகர் உடலை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்து தலையை வெட்டி கூவம் ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக பிரமுகர் மாயம்
சென்னை மணலி செல்வ வினாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் திருவொற்றியூர் 7வார்டு திமுக வட்ட பிரதிநிதியாகவும், அப்பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார் . இந்நிலையில் கடந்த10 ஆம் தேதி அன்று சக்கரபாணி காணவில்லை என்று மணலி காவல் நிலையத்தில் , அவரது மகன் நாகேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனிப்படை அமைத்த காவல்துறை
ஆவடி துணை ஆணையர் மகேஷ் குமார் உத்தரவின் பேரில், மணலி சரக உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ராயபுரம் கல்மண்டபம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில் சக்கரபாணியில் செல்போன் பயன்பாட்டில் இருந்ததை சிக்னல் மூலம் அறிந்து கொண்டனர். பின்னர் அங்கு சென்ற மணலி போலீசார், அப்பகுதியில் சக்கரபாணியின் இருசக்கர வாகனம் நிற்பதை பார்த்துள்ளனர் .
காட்டிக் கொடுத்த செல்போன் டவர்
சக்கரபாணியிடம் இறுதியாக பேசிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்த போது, டில்லி பாபு என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் கொடுத்த தகவலின்பேரில் பேரில் போலீசார், கிரேஸ் கார்டன் மூன்றாவது தெருவில் தமீம் பானு என்பவரது வீட்டிற்கு சக்கரபாணி அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது.
பாத்ரூமில் மிச்சம் மீதி உடல்
இதனையடுத்து தமீம் பானு வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரது வீட்டு கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். பயந்து போன தமீம் பானு, வீட்டின் கதவை திறந்துள்ளார். இதனையடுத்து வீட்டினுள்ளேயே சென்ற போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பாத்ரூமில், உடல் துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில், கவரில் கட்டட்பட்ட சடலம் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ராயபுரம் போலீசாருக்கு மணலி போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் போலீசார், துண்டாக்கப்பட்ட உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தமீம் பானு, மற்றும் அவரது சகோதரர் வாசிம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் திடுக்கிடும் உண்மை
காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் , தமிம்பானுவின் கணவர் அஸ்லாம் உஜைனி, டி. நகர் பகுதியில் நடைபாதையில் துணி வியாபாரம் செய்து வருவதாகவும் , மணலி புதுநகரில் இருந்தபோது சக்கரபாணி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அதுவே தகாத உறவாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் தமீம்பானுவின் கணவருக்கு தெரியவரவே அவர்கள் மணலி வீட்டை காலி செய்து விட்டு ராயபுரம் கிரேஸ் கார்டனில் குடியேறினர். ராயபுரம் வந்த பின்னரும் தமீம்பானு, சக்கரபாணி இடையே தகாத உறவு தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி தமீம் பானு வீட்டிற்கு வந்த சக்கரபாணி அவருடன் உறவு வைத்துள்ளார். அதைப் பார்த்த, அவரது தம்பி வசிம்பாஷா ஆத்திரத்தில் அவரை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் சக்கரபாணி உடலை என்ன செய்வது என்று தெரியாமல், உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டினர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு, சக்கரபாணியின் தலையை மட்டும் கொண்டு சென்று அடையாறு ஆற்றில் தூக்கி வீசி விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மற்ற உடல் பாகங்களையும் அதே ஆற்றில் வீசுவதற்கு திட்டமிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமீம்பானு, வசிம்பாஷா, டில்லிபாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணி தலையை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மூன்று பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion