![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர் கைது.. கணவனே குற்றவாளியான அதிர்ச்சி சம்பவம்..
சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காலித் ஹாசன் மற்றும் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தபரூக் ஹுசேன் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
![Crime : நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர் கைது.. கணவனே குற்றவாளியான அதிர்ச்சி சம்பவம்.. Husband friend arrested for taking video of friend wife taking a bath intimidating sexually abusing husband too for marrying 15 year old woman Crime : நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர் கைது.. கணவனே குற்றவாளியான அதிர்ச்சி சம்பவம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/966e9144ba443d374bdce0a12e1cdb21_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற இளஞ்ஜோடிகள் போலீசாரிடம் தனது நண்பன் என் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அந்த வீடியோவை என் மனைவியிடம் காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறி புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரண்டாவது திருமணம்
மேற்குவங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதாகும் தர்போக் உசைன் மற்றும் அவருடைய நண்பர் 24 வயது காலித் ஹசன் இருவரும் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமான தர்போக் உசைன், அதே மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது ஆசை வார்த்தை கூறி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் காலித் ஹாசன். காலித் ஹசனுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது.
குரோம்பேட்டையில் கட்டிட வேலை
திருமணம் முடிந்த பிறகு எங்கு சென்று வாழ்க்கையை தொடங்குவது என்று நினைத்தபோது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தபரூக் ஹுசேன் (வயது-28) என்ற நண்பர் சென்னை குரோம்பேட்டை துர்கா நகரில் தங்கி கட்டிட வேலை செய்து கொண்டிருப்பதால் அவரை தொடர்பு கொண்டுள்ளார். என் மனைவியை அழைத்துக் கொண்டு நான் சென்னைக்கு வருவேன் என கூறிவிட்டு தம்பதிகள் இருவரும் ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்துள்ளனர். நண்பர் காலித் ஹசன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்தார். நண்பர்கள் இருவரும் கட்டிட வேலைக்காக வேலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குளிக்கும்போது விடியோ
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு காலித் ஹாசன் வேலைக்கு தயாராகி அவரது நண்பரை அழைத்துள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தபரூக் ஹுசேன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த 14-வயது சிறுமி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.
மிரட்டி பாலியல் வன்கொடுமை
அப்போது தபரூக் ஹுசேன், சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அந்தச் சிறுமியிடம் காட்டி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோன்று கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தன் கணவரிடம் தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
நேபாள மொழி
புகாரளித்த பிறகு போலீசார் தபரூக் ஹுசேன் என்பவரை கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். மகளிர் போலீசார் இருவரையும் விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் நேபாள மொழியில் பேசியதால் போலீசாருக்கு மொழி புரியாமல் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மொழிபெயர்ப்பாளரை வரவைத்து விசாரணையை தொடங்கினார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மைனர் பெண்
தபரூக் ஹுசேன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் காலித் ஹாசனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணுக்கு 15 வயது மட்டுமே ஆவதும் தெரிய வந்தது.
புழல் சிறை
அதன் பின்னர் சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காலித் ஹாசன் மற்றும் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தபரூக் ஹுசேன் இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் 14-வயது சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)