காதலனோடு தனிமையில் இருப்பதை கண்ட தாய்… கட்டையால் அடித்து கொன்ற 15 வயது மகள்! குஜராத்தில் பரபரப்பு!
தக்ஷா மயங்கி இருந்தபோது, மீனாட்சி தன் காதலனை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக தக்ஷா மருந்தின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ, தன் மகளை அவரது காதலனுடன் அந்த வீட்டில் கண்டுள்ளார்.
![காதலனோடு தனிமையில் இருப்பதை கண்ட தாய்… கட்டையால் அடித்து கொன்ற 15 வயது மகள்! குஜராத்தில் பரபரப்பு! Gujarat 15 year old daughter beaten to death by a mother who saw her with her boyfriend alone காதலனோடு தனிமையில் இருப்பதை கண்ட தாய்… கட்டையால் அடித்து கொன்ற 15 வயது மகள்! குஜராத்தில் பரபரப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/3c1ced4a9879e059236fdd4f13645ad41685507497480109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள இவ்நகர் கிராமத்தில், 35 வயது பெண்ணின் சொந்த மகளே அவரைக் கொலை செய்த கொடூர சம்பவம் குறித்த விசாரணையில் அவர் ஏன் கொன்றார் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலனுடன் சிக்கியதால் துணிகரம்
ஆஜ் தக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”மீனாட்சி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அவரது தாய் தக்ஷாவை தூங்க வைக்கும் முயற்சியில், அவருக்கு தூக்க மருந்து கொடுத்துள்ளார். தக்ஷா மருந்தின் தாக்கத்தில், மயங்கி இருந்தபோது, மீனாட்சி தன் காதலனை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக தக்ஷா மருந்தின் மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நிலையில், தன் மகளை அவரது காதலனுடன் வீட்டில் கண்டுள்ளார்.
தந்தையிடம் சொல்லிவிடுவார் என்ற பயம்
அதன் பின் அது கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. அப்போது மீனாட்சி தன் தாயிடம் இது குறித்த எந்த தகவலையும் தன் தந்தையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இருப்பினும், அவர் சொல்லி விடுவாரோ என்ற சந்தேகம் மீனாட்சிக்கு இருந்துள்ளது. மேலும் இதனால் குழப்பமடைந்த, மீனாட்சி ஒரு பெரும் வன்முறை செயலில் இறங்கினார்.
கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை
ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு பெரிய கட்டையை எடுத்து, அதை வைத்து மீனாட்சி தக்ஷாவின் தலையில் பலமுறை பலமாக தாக்கியுள்ளார்.ஒரு கட்டத்தில் அவரது அம்மா தக்ஷா இறந்த பின், மீனாட்சி தனது அறைக்குத் திரும்பி, எதுவும் நடக்காதது போல் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் கண்டு, இறந்தவரின் கணவருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்க, மறுநாள் சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்தனர்.
காவல்துறை விசாரணை
அந்த பெண்ணின் மரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், சம்பவத்தன்று வீட்டில் மீனாட்சி மட்டும் இருந்தது தெரியவந்தது. மேலும், சிசிடிவி கேமராக்கள் வேண்டுமென்றே இரவில் சிறிது நேரம் முடக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பியது. மீனாட்சி ஆரம்பத்தில் தனது தாயின் கொலை பற்றிய எந்தத் தகவலையும் கூற மறுத்தார். மேலும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூட பரிந்துரைத்தார். இருப்பினும், தீவிர விசாரணைக்குப் பிறகு, இறுதியில் அவர் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டார்," என்று போலீசார் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)