சென்னைக்கு கிரானைட் கற்கள் கடத்தல்... விழுப்புரத்தில் மடக்கி பிடித்த சுரங்கத் துறை அதிகாரிகள்
அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
![சென்னைக்கு கிரானைட் கற்கள் கடத்தல்... விழுப்புரத்தில் மடக்கி பிடித்த சுரங்கத் துறை அதிகாரிகள் granite stones smuggled to Chennai in Villupuram officials of the mining department who were wrapped up TNN சென்னைக்கு கிரானைட் கற்கள் கடத்தல்... விழுப்புரத்தில் மடக்கி பிடித்த சுரங்கத் துறை அதிகாரிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/4a2ef9860c20a295ad382741a1d3b6061690632228664113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: விழுப்புரம் வழியாக சென்னைக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான கருப்பு கிரானைட் கற்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் வழியாக லாரியில் கருப்பு கிரானைட் கற்கள் கடத்திச் செல்லப்படுவதாக விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலில் பேரில் உதவி புவியியலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை நான்கு முனை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல்லிருந்து வேகமாக வந்த ஒரு டாரஸ் லாரியை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதனுள் 16 டன் எடையுள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான 6 கருப்பு கிரானைட் கற்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கிரானைட் கற்களை நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கிரானைட் கற்களுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரானைட் கற்களை கடத்திச் செல்ல முயன்றவர்கள் யார்?, வாகன பதிவுஎண்ணை வைத்து விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)