மேலும் அறிய
Advertisement
Crime: கல்லூரி மாணவர்கள்தான் டார்கெட்; போதை மாத்திரை கும்பல் தலைவன் கைது - 17 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்..!
மதுரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர்.
மதுரயில் கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்
வந்துள்ளது.
இதனையடுத்து மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகர் வடக்கு காவல் துணை ஆணையர் மற்றும் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் தலைமையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போதைப் பொருள்:
இந்நிலையில், தனிப்படை காவல்துறையினர் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அதன்படி மதுரை வைகை வடகரை பகுதியில் மதிச்சியம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் ட்ரிப்ள்ஸ் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினர் அப்போது பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தப்பியோடிய நிலையில் பைக்கில் வந்த மதுரை மாவட்டம் வடகாடுபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழ் அழகன் (19) என்ற இளைஞரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அப்போது தமிழ் அழகனின் நண்பர்களான விக்கிரமங்கலத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் கவாஸ்கர் என்ற வெள்ளையன் ஆகிய இருவரும் மருந்தாளுனருக்கு (D.Pharm) படித்த முரளிதாஜ்(27) என்பவர் வாட்ஸ் அப் மூலமாக தினேஷிற்கு பழக்கமாகி அதன் மூலம் போதை தரும் தூக்கமாத்திரை மற்றும் வலி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
போதை மாத்திரை கும்பல் தலைவன்:
இதனையடுத்து தமிழ் அழகன் அளித்த தகவலின்படி மதுரை அண்ணா நகர், தேவர் தெரு பகுதியில் முரளிதாஜ் (27) வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தேடி வருபவர்களுக்கும் போதை மாத்திரை விற்பனை செய்துவந்தது தெரியவந்ததையடுத்து.
அவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த இருந்து 17,030 காலாவதியான மாத்திரகளை போதை மருந்திற்காகவும் காலாவதியான 105 டானிக் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தமிழ் அழகன் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலின் தலைவனான முரளிதாஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில தலைமறைவாகியுள்ள தினேஷை தனிப்படையின் தேடிவருகின்றனர். கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion