மேலும் அறிய

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!

பிரிதிலதாவின் தங்கை பூஜா சக்ரவர்த்தி 2 நாட்களாக தொடர்பு கொண்ட நிலையில் யாரும் எடுக்காததால் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி என்ன நிலைமை என பார்த்து வர அனுப்பியுள்ளார். அப்போது அந்த கொலை நடந்தது என தெரிய வந்தது.

வங்கதேசத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கதேசத்தில் உள்ள ரங்க்பூர் மாவட்டப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆசிரியரான 65 வயதான கணபதி சக்ரவர்த்தி என்பவர் தனது மனைவி 50 வயதான பிரிதிலதா சக்ரவர்த்தி, அவர்களது மகள் 23 வயதான அகமி சக்ரவர்த்தி மற்றும் 12 வயது மகன் பிரியம் சக்ரவர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் குடும்பத்தினரின் மொபைல் போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. 

கடைசியாக பிரிதிலதாவின் தங்கை பூஜா சக்ரவர்த்தி 2 நாட்களாக தொடர்பு கொண்ட நிலையில் யாரும் எடுக்காததால் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி என்ன நிலைமை என பார்த்து வர அனுப்பியுள்ளார். அப்படியாக வந்த உறவினர்கள் முன்வாசல் பூட்டப்பட்டிருந்தையும், வீட்டினுள் இருந்த விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டதையும் கண்டனர். ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு 4 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கணபதி குடும்பம் அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருப்பதும், அவர்களுக்கு யாருடனும் முன்பகை இல்லை எனவும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்படியிருக்கும்போது யார் இந்த 4 பேரையும் கொலை செய்தது என தெரியாமல் போலீசார் தவித்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்களின் சந்தேகப் பார்வை உறவினர்களான முக்தோ மற்றும் சித்தார்த்தா  மீது திரும்பியது. 

இருவரும் பக்கத்து வீடு வழியாக கணபதி வீட்டு மாடிக்கு சென்று அதிக போதை தரும் போதைப்பொருளான மெத்தம்பேட்டமைனை பயன்படுத்தியுள்ளனர். சத்தம் கேட்டு கணபதி மாடிக்கு சென்ற நிலையில் தாங்கள் மாட்டி விடுவோம் என நினைத்த முக்தோ மற்றும் சித்தார்த்தா இருவரும் தங்களிடம் இருந்த துண்டைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்தனர். 

தொடர்ந்து சத்தம் கேட்டு மாடிக்கு செல்ல முயன்ற கணபதியின் மனைவி பிரிதிலதாவை படிக்கட்டிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் மகள் அகமி மற்றும் மகன் பிரியம் ஆகியோரும் தங்களை காட்டிக் கொடுத்து விட வாய்ப்புள்ளது என கொலை செய்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் குற்றம் செய்த பிறகு துளியும் பயமில்லாமல் அவர்கள் ஆறு முதல் ஏழு மணி நேரம் அந்த வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்தனர். அப்போது போதைப் பொருட்கள், உணவை உட்கொண்டனர். வீட்டில் இருந்த பேரீட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளனர். 

தொடர்ந்து அந்த வீட்டில் குளித்த அவர்கள், நகைகளையும் திருடி உருக்கியுள்ளனர். இதனால் தங்க நகையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தபோது தான் முக்தோ மற்றும் சித்தார்த்தா இருவரும் சிக்கியுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget