மேலும் அறிய

துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் கடந்த 2007 -ம் ஆண்டு முதல் பாதாளசாக்கடை திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாளசாக்கடை பராமரிப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பராமரித்து வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் இணைப்புகளுக்கான இத்திட்டத்தில் அளவுக்கதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். 

இந்ந சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு குழாய் செல்லும் சாலைகளில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவது தொடர்ந்து வருகிறது. கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே, தரங்கம்பாடி சாலை, தைக்கால்தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி, திருவாரூர் சாலை என்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுவதும் அதனை தற்காலிகமாக சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

மேலும் பாதாளசாக்கடை பிரச்சனையால் மயிலாடுதுறையில் உள்ள 36 வார்டுகளிலும் அவ்வப்போது கழிவுநீர் பல்வேறு சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

இந்த சூழலில் கடந்த திமுக ஆட்சியின் போது மயிலாடுதுறைக்கு வருகை தந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், இந்த திட்டத்தால் அரசு பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதை முழுமையாகப் புனரமைக்க சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிந்துரை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து விடுபட்ட பகுதிகளுக்கு புதிய குழாய்கள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 82 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடரும் கழிவுநீர் சீர்கேடு 

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்ற போதிலும், நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆழ்துளைத் தொட்டிகள் (Manholes) வழியாக வெளியேறி வருகிறது. முக்கியமாக மாருதி நகர், அவையாம்பாள்புரம், பட்டமங்கலத் தெரு, கூரைநாடு உள்ளிட்ட இடங்களில் தினமும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி நகர் முழுவதும் கடுமையான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நகராட்சி நிர்வாகம், இந்த சாக்கடை கழிவுநீரை மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் நேரடியாக திறந்து விடுவதாகவும் பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ரஸ்தா மனவெளி தெருவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை

குறிப்பாக, ரஸ்தா மனவெளி தெரு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் ஆழ்துளைத் தொட்டி வழியாக சாலையில் தொடர்ச்சியாக வழிந்தோடி வருகிறது. இதிலிருந்து வீசும் தாங்க முடியாத துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து, காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் வேதனை

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியப்போக்கு காட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தினமும் சாக்கடை நீரைக் கடந்து செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள், இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு பாதாள சாக்கடைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Embed widget