மேலும் அறிய

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

ஜோதி சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்தோடு தலைமறைவாக, இவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் மற்றும் முகவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி பல கோடிகளை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியையும் 6 தோட்டக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சீட்டு நிறுவன மோசடி

சீட்டு விஷயத்தில் மோசடி செய்வது குறித்து பல காலங்களுக்கு முன்னரே வெளியில் தெரியவந்தது. மக்கள் விழிப்புணர்வு அடைந்திருந்து அதில் ஏமாற்றுபவர்கள் குறைந்திருந்தாலும், கண்கவர் ஆஃபர்களை கொடுத்து ஆசைகளை தூண்டி இன்னமும் மக்களை ஏமாற்றும் வேலை அவ்வபோது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிதான் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்த மோசடியில் சிக்கி உள்ளனர். இவர்கள் மொத்தம் 20 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்லை அடுத்த மாளந்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 33 வயதான ஜோதி என்பவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு ஜோதி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளனர். இருவரும் இணைந்து இந்த நிறுவனத்தின் மூலம் தீபாவளி சீட்டு என்ற பெயரில் பெரும் மோசடியை நடத்தி இருக்கிறார்கள். 

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

கண்ணைக் கவரும் ஆஃபர்

மாதம் ரூ.1,000 செலுத்தினால் 4 கிராம் தங்கத்துடன் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் தருவதாகவும், மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் ஒரு திட்டமும், மாதம் ரூ.500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் 20 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள், மளிகை பொருட்கள் வழங்குவதாக ஒரு திட்டமும், அறிவித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்த தீபாவளி சீட்டின் மீது ஈர்க்கப்பட்டு பலர் சேர்ந்துள்ளனர். தாமரைப்பாக்கம், மாளந்தூர், வெங்கல், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்: Chennai Snow: ஊட்டியாக மாறிய சென்னை..! திடீரென வீசும் கடும் குளிருக்கு காரணம் என்ன..?

ரூ.20 கோடி வசூல்

இதனிடையே இந்த சீட்டு நிறுவனத்தில் இருந்து சத்தியமூர்த்தி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் ஜோதியின் மனைவி 25 வயது சரண்யா மற்றும் 65 வயது தந்தை மதுரை மற்றும் 30 வயதாகும் சகோதரர் பிரபு என்கிற பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் தீபாவளி சீட்டு பணத்தை தொடர்ந்து வசூலித்து வந்துள்ளனர். மேலும் நிறுவனம் வளர வளர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிளை நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அங்கெல்லாம் பல முகவர்களை நியமித்து சுமார் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் வசூலித்ததாக தெரிகிறது.

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

குடும்பத்தோடு தலைமறைவு

தீபாவளி நெருங்க நெருங்க பணம் செலுத்தியவர்கள் உரிய பொருட்களை கேட்டு தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் சுதாரித்த ஜோதி, சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்தாருடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் இவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் மற்றும் முகவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி புகார் மனு கொடுத்துள்ளனர். அதன்படி, வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து அதற்காக இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் செங்குன்றம் அருகே ஜோதி பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற தனிப்படை காவல்துறை ஜோதி மற்றும் அவரது தந்தை மதுரை, மனைவி சரண்யா மற்றும் தம்பி பிரபு ஆகியோரை கைது செய்தனர். கைது செய்தபோது அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதனுள் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அந்த துப்பாக்கி உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்று தெரியவந்தது. கைதான 4 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget