மேலும் அறிய
Advertisement
Crime : போலீஸ்காரங்க கூட இப்படி பண்ணா என்ன அர்த்தம்...! அட போங்கப்பா, அதிரடி காட்டிய எஸ்.பி..!
காஞ்சிபுரத்தில் அதிக லாபம் அளிப்பதாக கூறி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்ட இரு போலீஸார் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சௌமியா, இவரது தம்பி ஆரோக்கிய அருண் போக்குவரத்து காவலராக காஞ்சிபுரத்தில் பணி புரிகிறார். மற்றொரு தம்பி இருதயராஜ் காவல் பணியில் இருந்தவர். அவர் அந்தப் பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி செய்கிறார். இவர்களது தந்தை ஜோசப், தாயார் மரியச்செல்வி. இவர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரு நிறுவனங்களின் விற்பனை உரிமை எடுப்பது பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளனர்.
பல்வேறு புகார்கள்
இதுபோல் போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் கூறி அவர்களிடம் இருந்து ரூ.40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சகாயபாரத், அவரது மனைவி சௌமியா, இருதயராஜ் அவரது மனைவி ஜெயஸ்ரீ, இவர்களின் தாயார் மரியச்செல்வி ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு
போக்குவரத்து காவலர் அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர்கள் மூவரையும் இன்று கைது செய்தனர். நிதி மோசடி வழக்கில் போலீஸார் குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்ட சமம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது ,முதல் கட்ட விசாரணையை நாங்கள் செய்து வருகிறோம். இதன் பின்னர் இது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு மாற்றப்படும் என்றார்.
ஏற்கனவே ஐ.பி.எஸ். ஆருத்ரா கோல்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து பலர் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில் தற்போது இவர்களிடமும் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் போலீஸாராக இருப்பதால் காவல்துறையில் பணி செய்யும் பலர் இவர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion