நிதிநிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க ரூ.35 லட்சம் வாங்கி மோசடி - 2 பேர் கைது
திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் அருகே நிதிநிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க ரூ. 35 லட்சம் வாங்கி மோசடி செய்தவர்களை குற்றவியல் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையை சேர்ந்தவர் திருமலைசாமி (66). விவசாயி. அவருடைய மனைவி லட்சுமி (60). இவர்களை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொசவபட்டியை சேர்ந்த காளிமுத்து (55), செந்தில்குமார் (45) ஆகியோர் தொடர்பு கொண்டனர். அப்போது 2 பேரும் ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வருவதாக தெரித்துள்ளனர்.
AIADMK EPS: “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு
அதோடு தங்களுடைய நிதிநிறுவனத்தில் பங்குதாரராக லட்சுமியை சேர்ப்பதாகவும், அதன்மூலம் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனை உண்மை என நம்பிய திருமலைசாமி, லட்சுமி தம்பதியினர் ரூ.35 லட்சம் கொடுத்து உள்ளனர். ஆனால் நிதி நிறுவனத்தின் லாபத்தில் திருமலைசாமி, லட்சுமி தம்பதிக்கு பங்கு கொடுக்காமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த தம்பதி, தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். அப்போது காளிமுத்து மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகே, தங்களிடம் அவர்கள் பணம் மோசடி செய்ததை தம்பதி தெரிந்துள்ளனர்
இருமல் மருந்தால் 199 பேர் உயிரிழப்பு? - இந்தோனேசியாவில் இழப்பீடு கோரும் பொதுமக்கள்!
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாலர் வினோதா, சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்