மேலும் அறிய

AIADMK EPS: “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு

AIADMK: அதிமுக வளர்ச்சியை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது என உண்ணாவிரதப் போராட்டத்தில் இபிஎஸ் ஆவேசமாக பேசியுள்ளார்.

AIADMK: அதிமுக வளர்ச்சியை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது என கோவையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இபிஎஸ் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும், முதலமைச்சரை பொம்மை முதல்வர் மற்றும் யோக்கிய சிகாமணி என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். 

திமுக அரசைக் கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த  போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமியும் கலந்து கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். 

இதில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச்செயளாலர் எடப்பாடி கே பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மிகவும் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பேசியதாவது: 18 மாத விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் அத்தனையும் கண்டித்து இந்த  உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு மக்கள் வயிற்றெச்சல், கோபத்தை உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர்.

18  விடியா திமுக ஆட்சியில் என்ன நன்மை ஏற்பட்டுள்ளது. என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பம்தான் அடைந்துள்ளனர். ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர், திறமையில்லாத முதலமைச்சர். மேலும், ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு 18 மாத கால ஆட்சியே சாட்சி.  தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் கார்ப்ரேட் ஆட்சி நடக்கிறது. ஒரு கம்பெனி தமிழ்நாட்டினை ஆட்சி செய்கிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி எனப் பேசியுள்ளார். 

மேலும், “சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மக்கள் மீது சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. 53 சதவீதம் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படிப்படியாக உயர்த்தலாம் ஆனால் திமுக அரசு அதனைச் செய்யவில்லை. தொழில் வளம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றிவிட்டார்கள். கம்பி, சிமெண்ட் விலை உயர்வால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும். பொய் வழக்கால் அதிமுகவை முடக்க முடியாது. அதிமுகவின் வளர்ச்சியை ஒரு ஸ்டாலின் மட்டும் இல்லை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது” எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், “இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. நாம் செய்ததை தான் திமுக அரசும் செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் அதிக தார்சாலை உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமை பெற்றோம். பத்து ஆண்டு கால பொற்கால ஆட்சியில் அதிக விருதுகளை தமிழகம் பெற்றது. அதிமுக பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு செல்லவில்லை. வீறு நடை போட்டது. எங்களது ஆட்சியை பார்த்து எதிர்கட்சிகள் வயிறு எரிகிறது என முதலமைச்சர் சொன்னார்,  ஆனால் மக்கள் வயிறு எரிகிறது” என அவர் பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget