மேலும் அறிய

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?

சென்னையிலிருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் எந்திர கோளாறு.

சென்னையில் இருந்து 139  பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஓடிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித  நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ஏழு விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் நல்வாழ்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது காலை 9 மணிக்கு மேல்  புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கப்பட முடியவில்லை என்றால், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புறப்பட்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது. பயணிகளை  நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?
 
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3:20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும்  அதிகாலை 1:30 மணிக்கு தோகாவிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதை போல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தது.
 
திடீர்  கோளாறு
 
இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை சுங்க சோதனை அனைத்தும் முடித்துவிட்டு தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் மொத்தம் 146 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. 
 
அதிகாலை 3:50  மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்து உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.
 
 
விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில்...
 
இதை அடுத்து விமானத்தை இழுவை வண்டி  மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு எழுத்து கொண்டு வந்து  புறப்பட்ட இடத்திற்கு நிறுத்தினர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமான பொறியாளர்கள் விமானத்திற்கு ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காலை 6 மணி வரை விமானம் பழுதுபார்க்கப்படவில்லை. இதை அடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும், விமானத்தில் இருந்து இறக்கி விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.விமான பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?
 
உயிர் தப்பினர்
 
அவ்வாறு பழுது பார்க்கப்பட  முடியவில்லை என்றால், பயணிகளை ஹோட்டல்கள் தங்க வைத்துவிட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை தான் விமானம் புறப்பட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் புறப்படுகிறது. இதனால் 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Anna Salai Flyover Opening Date: இனி 5 நிமிஷம்தான்! அண்ணாசாலை ட்ராஃபிக்கிற்கு எண்ட் கார்டு! நவம்பரில் திறக்கப்படும் மேம்பாலம்!
இனி 5 நிமிஷம்தான்! அண்ணாசாலை ட்ராஃபிக்கிற்கு எண்ட் கார்டு! நவம்பரில் திறக்கப்படும் மேம்பாலம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget