மேலும் அறிய

திண்டுக்கல் : காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்தவரை அடித்து உதைத்த உறவினர்கள்..!

இளம்பெண் கொடைக்கானலில் படித்து வந்த நிலையில் மேகநாதன் அவ்வப்போது கொடைக்கானலுக்கு சென்று சந்தித்து  வந்ததாக கூறப்படுகிறது.

காதலியுடன் நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலனுக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர். இதனால் காதலன் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தை சேர்ந்த டிப் டாப் இளைஞன் ஒருவன் வேடசந்தூர் அருகே கோவிலூரை சேர்ந்த இளம்பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறி இருவரும் வீடியோ காலில் ஆடையின்றி இருந்த புகைப்படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்தப் பெண்ணை மிரட்டி வந்த டிப்டாப் இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்தனர் பெண்ணின் உறவினர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கூலி வேலை பார்த்துவரும் ஒருவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அப்பெண் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தை சேர்ந்த மேகநாதன் என்பவருடன் அப்பெண் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். சில நாட்களாக நட்பாக பழகி வந்த இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது காதலை சமூக வலைதளம் மூலம் வளர்த்து வந்த நிலையில் நாளடைவில் இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். 

திண்டுக்கல் : காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்தவரை அடித்து உதைத்த உறவினர்கள்..!

அப்பெண் கொடைக்கானலில் படித்து வந்த நிலையில் மேகநாதன் அவ்வப்போது கொடைக்கானலுக்கு சென்று சந்தித்து  வந்ததாக கூறப்படுகிறது. இது தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணிற்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மேகநாதன் அந்த பெண்னை உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று வரவழைத்து, அப்பெண்ணின் செல்போன் மூலம் அவருடைய உறவினர்களின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டுள்ளார். இருவரும் வீடியோ கால் மூலம் பேசி வந்தபோது, அதில் இருவரும் உள்ளாடையின்றி  பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களை காதலன் உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது

அதன்பின்பு உறவினர்கள் மூலம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 22.8.2021 அன்று இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மேகநாதனை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் செய்தது தவறு என்றும், இனி இது போன்று செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இம்மாதம் 9-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு திருமணம் முடிவு செய்துள்ள நிலையில், அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மேகநாதன் மீண்டும் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்ய இருந்த மணமகனுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார்.

இதனை அறிந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதாகவும் இதனால் மனவேதனையடைந்த அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண்ணின் உறவினர்களின் ஆலோசனைப்படி மேகநாதனை தனது சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளார். மகிழ்ச்சியில் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் வேடசந்தூர் அருகே உள்ள பெண்ணின் சொந்த ஊருக்கு காரில் வந்துள்ளனர். ஊருக்குள் வந்த காரை  அப்பெண்ணின் உறவினர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதில் மேகநாதன் உடன் வந்த நண்பர்கள் தப்பித்து ஓடிவிட, மேகநாதன் உறவினர்களிடம் சிக்கிக் கொண்டார்.

சிக்கிய மேகநாதனை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனையடுத்து எரியோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மேகநாதனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மேகநாதனை தாக்கிய அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேகநாதனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், இதற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget