Crime: தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொன்ற மனைவி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி
மதுபோதையில் தகராறு செய்ததால் கொதிக்கும் எண்ணெயை விவசாயி மீது ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள குப்பாயிவலசு எனும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து.வயது 63. இவர் அப்பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னாத்தாள் (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து தினமும் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27-ந்தேதி இரவு செல்லமுத்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் பொன்னாத்தாளிடம் உணவு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
CM Stalin: சிங்கப்பூர் அதிரபரான தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
அதற்கு அவர் நள்ளிரவில் உணவு இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து அவரை தாக்கிவிட்டு தூங்க சென்றுள்ளார். இதை நினைத்து அழுது கொண்டே இருந்த பொன்னாத்தாள், தினமும் தகராறு செய்து வரும் தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் வீட்டில் இருந்த தேங்காய் எண்ணெயை எடுத்து சூடாக காய்ச்சி செல்லமுத்து தூங்கி கொண்டிருந்த அறைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். தனது மனதை கல்லாக்கி கொண்ட பொன்னாத்தாள் தூங்கி கொண்டிருந்த செல்லமுத்து மீது கொதிக்க, கொதிக்க இருந்த எண்ணெய்யை ஊற்றினார். இதில் அவர் வலியால் அலறினார். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் பொன்னாத்தாளிடம் கேட்டபோது, அடுப்பில் இருந்த எண்ணெய்யை கொட்டியதாக கூறினார். இதையடுத்து அவர்கள் செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லமுத்து உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே செல்லமுத்து போலீசிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது மனைவிதான் எண்ணெய்யை காய்ச்சி தன் மீது ஊற்றியதாக கூறினார். இதையடுத்து போலீசாரிடம் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பொன்னாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தினார்.
அன்று திருப்பதி இன்று மேல்மருவத்தூர்...! தொடரும் அன்புமணியின் ஆன்மிக பயணம்..! புகைப்படங்கள் வைரல்
அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில், செல்லமுத்து தினமும் குடித்து விட்டு வந்து போதையில் என்னிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவும் அவர் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்தாா். மேலும் பூரி போட்டு தருமாறு கேட்டு என்னை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவர் தூங்கி கொண்டிருந்தபோது கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றி கொலை செய்தேன் என்று கூறினார். மதுபோதையில் தகராறு செய்ததால் கொதிக்கும் எண்ணெயை விவசாயி மீது ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.