மேலும் அறிய

திருமண அழைப்பிதழில் பெயர் போடாத தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன் - நிலக்கோட்டையில் அதிர்ச்சி

எங்களை ஊரார் கேலியாக பேசும் நிலை ஏற்பட்டது. எங்கள் குடும்பத்தை மட்டும் எனது தாத்தா ஏன் ஒதுக்கி வைத்திருக்கிறார் என்ற கேள்வி சிறு வயதில் இருந்தே எழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அழைப்பிதழில் பெயர் போடாததால் ஏற்பட்ட தகராறில் தாத்தாவை பேரன் வெட்டிக்கொன்ற சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி கரியாம்பட்டியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து வயது 78. இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஆச்சிமுத்துவின் 3-வது மகன் காட்டுராஜா. அவருடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமண அழைப்பிதழில், சில உறவினர்களின் பெயர்கள் அச்சிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆச்சிமுத்துவின் மூத்த மகன் ஆச்சிமுத்து தந்தை பெயரே மகனுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அவரது மகன் மருதை (27) மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் அழைப்பிதழில் போடவில்லை.

Aditya L1 Countdown : நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1.. தொடங்கியது கவுண்ட்-டவுன்..

திருமண அழைப்பிதழில் பெயர் போடாத தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன் - நிலக்கோட்டையில் அதிர்ச்சி

இதனால் மருதை ஆத்திரம் அடைந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாத்தா ஆச்சிமுத்துவை எழுப்பி கேட்டு மருதை தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அங்கு கிடந்த அரிவாளால், ஆச்சிமுத்துவை மருதை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஆச்சிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மருதை அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஆச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மருதையை கைது செய்தனர்.

One Nation One Election: எதிர்க்கட்சிகள் ஷாக்..! ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” குறித்து ஆராய சிறப்பு குழு - மத்திய அரசு அறிவிப்பு
திருமண அழைப்பிதழில் பெயர் போடாத தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன் - நிலக்கோட்டையில் அதிர்ச்சி

கைது செய்யப்பட்ட மருதை  போலீசாரிடம்  வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது தாத்தா ஆச்சிமுத்து, எங்களது குடும்பத்தை ஒதுக்கி வைத்திருந்தார். சமீபத்தில், எனது சித்தப்பா காட்டு ராஜாவின் திருமணம் வெளியூரில் நடந்தது. அந்த திருமண அழைப்பிதழில் என்னுடைய தந்தை பெயர் இடம் பெறவில்லை. எங்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கவில்லை. கடந்த ஆடி மாதம் நடந்த மருமகன் அழைப்பு நிகழ்ச்சிக்கு, கிராமத்தில் உள்ள அனைவரையும் அழைத்து தாத்தா மற்றும் சித்தப்பா விருந்து வைத்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியிலும், எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் எங்களை ஊரார் கேலியாக பேசும் நிலை ஏற்பட்டது. எங்கள் குடும்பத்தை மட்டும் எனது தாத்தா ஏன் ஒதுக்கி வைத்திருக்கிறார் என்ற கேள்வி சிறு வயதில் இருந்தே எழுந்தது.

Kushi Twitter Review: காதல் கதை கவர்ந்ததா?.. கசந்ததா? .. குஷி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!
திருமண அழைப்பிதழில் பெயர் போடாத தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன் - நிலக்கோட்டையில் அதிர்ச்சி

என்னுடைய தாத்தா மீது எனக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான், நேற்றுமுன்தினம் இரவு தாத்தா வீட்டுக்கு சென்றேன். அங்கு தாத்தா ஆச்சிமுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பி, எங்கள் குடும்பத்தை ஏன் ஒதுக்கி வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், எனக்கு கோபம் வரும் அளவுக்கு கேவலமாக பேசினார். இதனால் நான் அவரை வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அழைப்பிதழில் பெயர் போடாததால் ஏற்பட்ட தகராறில் தாத்தாவை பேரன் வெட்டிக்கொன்ற சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Embed widget