மேலும் அறிய
Advertisement
காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளை சம்பவம்; கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது
ரூ.60 லட்சம் பணத்தில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பிஎம்டபிள்யூ கார் வாங்கப்பட்டுள்ளது.
காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கேரளாவை சேர்ந்த ஒன்பது பேரை தனிப்படையினர் கைது செய்து 5 கிலோ தங்கம், 4 கார்கள், ரூ.19.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே கடந்த 28-ம் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கி வண்டியில் காருடன் 5 கிலோ தங்கம் பணம் ₹60 லட்சத்தை கடத்தி சென்றனர். இதனை அடுத்து பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜேசுதாஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. கார் மட்டும் கொள்ளையர்கள் விட்டுச் சென்று தங்க நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளாவைச் சார்ந்தவர் என தெரியவந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்த கொள்ளையர்களை 10 தனிப்படையினர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்தனர். இதில் கடத்தப்பட்ட தங்கம் 5 புள்ளி 9 ஆயிரம் கிலோ மற்றும் 19 புள்ளி ரூ.50 லட்சம் பணம் பிடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய கொள்ளையர்கள் சுஜித், சரத் ,பிரவீன் தாஸ் ஆகிய மூன்று பேரை கோயம்புத்தூரில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக சிகாபுதீன், சைனு அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் முக்கிய கொள்ளையர்களான அந்தோணி மற்றும் சீரியல் மேத்யூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒன்பது பேரிடம் இருந்து நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட பொழுது, ரூ.60 லட்சம் பணத்தில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பிஎம்டபிள்யூ கார் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேறு ஒரு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஒரு கார் வாங்கியதும் தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார் என மொத்தம் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த கோவை மண்டல ஐஜி பவானி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டு திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல்துறையினருக்கு பாராட்டுகளை வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion