Shocking Video: ஒன்றரை கி.மீ தூரம் வரை தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்... கொள்ளை கும்பலின் அட்டூழியம்: பகீர் வீடியோ!
டெல்லியில் ஒருவர் காரில் 300 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shocking Video: டெல்லியில் ஒருவர் காரில் 300 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1.5 கிலோ மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்ட நபர்:
டெல்லியில் மஹிபால்பூர் என்ற பகுதியில் 1.5 கிலோ மீட்டர் வரை ஒருவர் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இழுத்து செல்லப்பட்ட நபர் கார் ஓட்டுநர் என்று தெரியவந்துள்ளது. ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி சாலையின் ஓரத்தில் ரத்த காயங்களுடன் கிடந்திருக்கிறார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடி வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகீர் வீடியோ:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதில், ஒரு காரின் பின்பகுதியில், அடையாளம் தெரியாத நபர் இழுத்து செல்லப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு அவர் தரதரவென காரில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். பின்னர், ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிறகு, அவர் சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வெளியானது.
This is brutal!
— Jitender Sharma (@capt_ivane) October 11, 2023
दिल्ली के महिपालपुर इलाके में कार लूट कर चालक की सड़क पर घसीट कर हत्या की। #DelhiCrime pic.twitter.com/nZHZnEbyyy
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது. உயிரிழந்தவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிஜேந்தர் (43) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு கும்பல் பிஜேந்திராவின் காரை கொள்ளையடிக்க முயன்றது. அப்போது, பிஜேந்திரன் தடுக்க முயன்றுள்ளார். பின்னர், பிஜேந்திரன் காருடன் தப்பிச் செல்ல முயன்றபோது, கொள்ளை கும்பல் அவரை தாக்கிவிட்டு தரதரவென காரில் இழுத்துச் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க