மேலும் அறிய
Advertisement
ஏலச்சீட்டு மோசடி- கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 2 கிராம் எடை கொண்ட 44 தங்க காசுகள், 9 லட்சம் மதிப்புள்ள மளிகை சாமான்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏல சீட்டு பிரச்சனையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் அடுத்த முதுநகர் பகுதியைச் சார்ந்தவர் விருத்தகிரி (43). இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த விருத்தகிரி, திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை நெருங்குவதற்குள் தீ உடல் முழுவதும் பரவியுள்ளது. உடனடியாக அவரை மீட்டு போலீசார் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரிடமிருந்து ஒரு மனுவினை போலீசார் கைப்பற்றி பார்த்த பொழுது அம்மனுவில், தான் சிறு குறு தொழிலதிபராக இருந்து வரும் நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாகவும், பல ஆண்டுகளாக நல்ல முறையில் நடத்தி வந்த நிலையில் தீபாவளி சீட்டுக்காக பரிசுப் பொருட்கள் மளிகை சாமான்கள் ஆகியவற்றை தீபாவளிக்கு முன்பாகவே பட்டுவாடா செய்யும் விதத்தில் செய்து வந்ததாகவும் தனது வீட்டில் கீழ் தளத்தில் அரவை மில்லும், மேல்தளத்தில் குடியிருப்பு இருந்து வந்த நிலையில் எனது குடும்பத்தில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது சகோதரர்கள் சரவணன், மோகன்ராஜ் மற்றும் சகோதரி அரங்கநாயகி அவரது கணவர் சரவணன் ஆகியோர் தான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 2 கிராம் எடை கொண்ட 44 தங்க காசுகள், 9 லட்சம் மதிப்புள்ள மளிகை சாமான்கள் அறுவை மில்லில் இருந்து 15 லட்சம் மிக்க இயந்திரங்கள் தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகவும் அந்த அந்த நபர்களிடம் இது தொடர்பாக கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னை அடியாட்கள் வைத்து மிரட்டுவதாகவும் எனவே எனது சகோதரர், சகோதரியால் உயிருக்கு பேராபத்து ஏற்படும் நிலை உள்ளதாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனது பொருட்களை மீட்டு தர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து உடலில் 60% தீக்காய்களுடன் விருத்தகிரி கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக உடலில் தீ வைத்துக் கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion