Crime: வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் சைக்கோ தம்பதியிடம் சிக்கிய சிறுமி: 6 மாதம் தொடர் சித்ரவதை!
அசாமில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை தம்பதியினர் 6 மாதமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: அசாமில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை தம்பதியினர் 6 மாதமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் வீட்டு வேலைக்காக ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு சேர்ந்துள்ளார். இவர் முதலில் ஹிமாச்சலில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின், அசாம் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார். அப்போது, 16 வயது சிறுமி வேலைக்கு அமர்த்திருக்கின்றனர். அப்போது அந்த சிறுமியை கொடூரமாக தாக்கி உள்ளனர். மேலும், சிறுமிக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கின்றனர். இதில் கொடூரம் என்னவென்றால், சிறுமியின் ரத்தத்தையே சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
மேலும், அந்த சிறுமியின் பற்களை உடைத்தும், நாக்கில் கத்தியால் குத்தியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதோடு இல்லாமல், சிறுமி உணவு கேட்டும்போது, குப்பை தொட்டியில் இருந்து சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். இப்படியே தொடர்ந்து 6 மாதம் சிறுமி சித்ரவதை அனுபவித்து வந்திருக்கிறார். இதற்கிடையில், சிறுமி வேலை செய்யாமல் இருந்தால், ரத்தம் வரும் வரை உருட்டு கட்டையால் அடித்ததோடு, ஆடைய அவிழ்க்க சொல்லியும் உடலில் கடுமையாக அடித்துள்ளனர். அப்போது, அவரது உடலில் இருந்து வரும் ரத்தத்தை நக்கச் சொல்லி கொடுமைப்படுத்தி இருக்கின்றனர்.
ஆறு மாதங்களாக தொடர்ந்து சித்ரவதை அனுபவித்து வந்த சிறுமி, அங்கிருந்து தப்பிச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி மாடி படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்ததாக முதலில் தெரிவித்தனர். அதன்பின், போலீசார் சாட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
இதனை அடுத்து, போலுசார் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், படுகாயம் அடைந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், ”என் மகள் வீட்டிற்கு வந்தபோது அவளை அடையாளம் காண முடியவில்லை. என் மகளுக்கு 16 வயதுதான் ஆனால் வயதான பெண் போல் தோன்றினாள். அவள் பற்கள் உடைந்திருந்தது. நாக்கில் வெட்டுக் காயங்கள் இருந்தது. முகத்தில் தீக்காயங்களும், காதுகள் சிதைந்து போய் இருந்தது. என் மகளால் பேசக் கூட முடியவில்லை. எனது மகளை ஈவு இரக்கமின்றி தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க