Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
திருவண்ணாமலையில் சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
![Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை Crime Thiruvannamalai Siddhar Peeda administrator's house robbed of 45 pounds of jewellery TNN Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/c6c2a348a13b05cbe6f29ac5890ea0e21674625434601109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் ஊராட்சி அடுத்த சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது ( 41), இவர் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீட நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நேற்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ரமேஷுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த ரமேஷ் மற்றும் அவர் குடும்பத்தினருடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். பின்னர் ரமேஷ் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது படுக்க அரையில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அரையில் இருந்த பீரோக்களின் கதவுகளும் உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். வீட்டினுள் ஜன்னல் உடைத்து நுழைந்தனர். பின்னர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இன்ஸ்டா மூலம் காதல்...பெற்றோர் எதிர்ப்பு... ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
மேலும் வீட்டில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரின் வட்டாரத்தில் பேசுகையில், ரமேஷ் குடும்ப உறவினரின் திருமண நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற உள்ளது.
அதற்காக வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை நேற்று முன்தினம் மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். அதன் பிறகு தான் உறவினரின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போதுதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தனர். திருவண்ணாமலை நகர் பகுதி வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. காவல்துறையினர் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என்றும், இதுவரையில் காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்யாமல் உள்ளார்கள் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)