இன்ஸ்டா மூலம் காதல்...பெற்றோர் எதிர்ப்பு... ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
பெற்றோர் எதிர்ப்பால் ரயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடிக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள பால்வார்வென்றான் என்ற பகுதியில் விழுப்புரம் மற்றும் காட்பாடி ரயில்வே பாதை உள்ளது. இந்த பாதையில் தினந்தோறும் ரயில் வந்து செல்கின்றது. இதில் இன்று அதிகாலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரயில் முன்பு காதல் ஜோடிகள் இருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ரயிலில் சிக்கி இருவரின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவில் சிதறி சின்னா பின்னமாகி இருந்ததால் உடல்களை காட்பாடி ரயில்வே காவல்துறையினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் ரயில்வே காவல்துறையினர் யார்? தற்கொலை செய்து கொண்டனர் என அப்பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தின் அருகே பள்ளி பைய் ஒன்று இருந்தது. அதனை காவல்துறையினர் கைப்பற்றி அதில் இருந்த நோட்டுப் புத்தகத்தில் இருந்த பெயரை வைத்து அடையாளாம் கண்டுபிடித்தனர்.
அந்த நோட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா வயது (17). அபிநயா ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகள் அபிநயா என்றும், இவர் தந்தையை இழந்த அபிநயா தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். மாணவி ஆரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, ஆரணி அடுத்த கூடலூர் அருகே உள்ள அரியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் சக்திவேல் வயது (19), இவர் போளூர் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐ பயிற்சி பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்போது ஐடிஐ மாணவன் சக்திவேலுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி அபிநயாக்கும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக பழகி வந்தனர். அதன் பிறகு இந்த பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. இருவரின் காதல் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. பின்னர் இருவரின் பெற்றோர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த காதல் ஜோடி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து களம்பூர் அருகே உள்ள பால்வார்த்துவென்றான் கிராமம் அருகே இரவு ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றாக கைகோர்த்து கொண்டு நடந்து சென்று, விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு காதல் ஜோடி இருவரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களும் அடையாளம் தெரியாத வகையில் சிதறி கிடந்ததால் உடல்களை மீட்ட காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி பகுதியில் பள்ளி மாணவியும் கல்லூரி மாணவனும் காதல் விவகாரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060