மேலும் அறிய
Advertisement
Crime: பயமின்றி சைக்கிளை திருடும் லுங்கி கொள்ளையன் - காஞ்சிபுரத்தில் மக்கள் அச்சம்
Kanchipuram Cycle Theft : மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு, சாத்தான்குட்டை தெரு பகுதிகளில் கைக்கிள்களை திருடும் சிசிடிவி காட்சி.
காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தும் எவ்வித அச்சமுமின்றி சைக்கிளை திருடும் பலே லுங்கி கொள்ளையன்.
காஞ்சிபுரம் (Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜ்கபூர். இவருக்கு பிரவீன்ராஜ் என்கிற மகன் உள்ளார். இவ்வாண்டு 12ஆம் வகுப்பு பயிலவிருக்கும் பிரவீன்ராஜிக்கு அவரது தந்தை பள்ளிக்கே சென்று வர கியர் சைக்கிள் என்று சொல்லப்படக்கூடிய 11 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய உயரக சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சி
இந்த நிலையில், பிரவீன் ராஜ் கடந்த 7ஆம் தேதியன்று இரவு தனது சைக்கிளை வீட்டின் எதிரே பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் காலை வந்து பார்த்த போது தனது சைக்கிளை காணாததை கண்டு பிரவீன்ராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையெ டுத்து அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தும் எவ்வித அச்சமுமின்றி சைக்கிளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் புகார்
இதனையெடுத்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பிரவீன்ராஜ் தந்த ராஜ்கபூர் புகார் அளித்துள்ளார். இதே போல் 7-ஆம் தேதி மாலை சாத்தான்குட்டை தெருவில் இதே போல் லுங்கி அணிந்துவந்த மர்ம நபர் ஒருவர் சைக்கிளின் உரிமையாளரை போல உரிமையோடு பட்டப்பகலில் எடுத்து சென்றிருக்கிறார். இந்த நிலையில் இவ்விரண்டு இடங்களிலும் சைக்கிள்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion