மேலும் அறிய

Crime: மனைவியின் நண்பரை 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர் - சந்தேகத்தால் நிகழ்ந்த கொடூரம்

மனைவி மீதான சந்தேகத்தால் அவரது ஆண் நண்பரை 15 துண்டாக கணவர் வெட்டிக் கெலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மனைவி மீதான சந்தேகத்தால் அவரது ஆண் நண்பரை 15 துண்டாக கணவர் வெட்டிக் கெலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரின் காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை 35 துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற பல மாநிலங்களில் அரகேறி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு கொடூர கொலை நடந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம்

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் (25). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அக்ஷய் குமார் வேலைக்காக உ.பி.யில் வசித்து வந்துள்ளார். இவர் மீலால் பிரஜாபதியின் மனைவியுடம் நட்பாக பழகி வந்துள்ளார். மனைவி  அக்ஷய் குமாருடன் பழகி வருவது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கூறியும் மனைவியின் நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மீலால், அவரது மனைவியின் நண்பரை கொலை  செய்ய திட்டமிட்டுள்ளார்.

15 துண்டுகளாக வெட்டிய கொடூரம்

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி மீலால் மகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. மீலால் வேலைக்கு சென்றிருப்பதால் அவரது மனைவி மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிகிச்சையில் இருந்த மகளை கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில், தனது மனைவி மருத்துவனையில் இருப்பதாக கூறி, மனைவியின் நண்பர் அக்ஷய் குமாரை வீட்டிற்கு வர சொல்லி அழைத்தார்.
 
15 துண்டுகளாக வெட்டிக்கொலை:
 
பின்பு, வீட்டிற்கு வந்த அக்ஷய் குமாருக்கு  குளிப்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த அகஷய் குமார் சில மணி நேரங்களிலே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து, வீட்டில் இருந்த கோடாரியால் அக்ஷய் குமாரின் உடலை 15 துண்டுகளாக கொடூரமாக வெட்டியுள்ளார்.
 
பின்னர் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை 3 சாக்கு பையில் கட்டிக் கொண்டு அவரது ஆட்டோவில் புஸ்டா பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் மேம்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து, நேற்று காலை குப்பைகளை தெரு நாய்கள் கிளறி கொண்டிருக்கும் போது உடல் பாகங்கள் கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர். 
 
உடல் பாகங்களை மீட்டு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டது அக்ஷய் குமார் என்பது தெரியவந்தது. பின்னர், வீட்டில் இருந்த மீலால் பிரஜாபதி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Embed widget