Crime: ஏற்கெனவே திருமணமானவரோடு காதல்: 31 துண்டுகளாக வெட்டப்பட்ட இளம்பெண்: பகீர் பின்னணி!
ஒடிசாவில் 21 வயது இளம்பெண் 31 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: ஒடிசாவில் 21 வயது இளம்பெண் 31 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்:
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் 21 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டனர். அங்கு 31 துண்டுகளாக இளம்பெண் வெட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொல்லப்பட்ட 21 வயது இளம்பெண் திலாபதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் முருமாதிஹி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களாக காதலித்து வந்த அவர், சமீப காலமாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் சந்திர ரௌத்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால், சந்திர ரௌத் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான், இளம்பெண் திலாபதி அவரை காதலித்ததோடு இல்லாமல், திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்.
விசாரணையில் அம்பலம்:
இதனை சந்திர ரௌத் மறுக்கவே, கடந்த வியாழன்கிழமை இரவு அவரது வீட்டிற்கே சென்றிருக்கிறார். அங்கு அவர் மனைவி முன்பே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால், இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், தம்பதியினர், இளம்பெண் திலாபதியை 31 துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து, அருகில் இருக்கும் காட்டில் புதைத்துள்ளனர்" என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், இளம்பெண் காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இளம்பெண்ணை கொலை செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க