Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டுப் போன வழக்கில் நகை திருடனை வாகன தணிக்கையின் போது போலீசார் கைது செய்து அவனிடமிருந்த 103 பவுன் நகையை போலீசார் கைப்பற்றினர்.
![Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது Crime news Robber arrested for stealing 103 pounds from businessman's house in Karur TNN Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/01ff3a8334011d81a2fc7382c641af271679296261621183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டியன் என்பவர் வீட்டில் கடந்த 13ஆம் தேதி 103 பவுன் நகை திருட்டுப் போனது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளி கண்டறிந்து திருட்டுப் போன நகையை மீட்க கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரமங்கலம் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் 19.03.2023 காலை 11 மணியளவில் டவுன்ஸ் இன்ஸ்பெக்டர் நகர காவல் நிலைய பேக்கரிக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக ஐந்து ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான அமராவதி ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஐந்து ரோட்டை நோக்கி கையில் மஞ்ச பையுடன் நடந்து சென்ற நபரை போலீசார் நோட்ட மிட்டனர். போலீசாரை பார்த்தவுடன் அந்த நபர் மீண்டும் அமராவதி ஆற்று படுகை பகுதிக்கு சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர் தன்னுடைய பெயர் பாலாஜி திருச்சி மாவட்டம் ரியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தற்போது திருப்பூர் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் சோதனையின் போது அவர் வைத்திருந்த பையில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு நகைகள் என தெரிய வந்தது மேலும் போலீசார் விசாரணையில் கடந்த 13ஆம் தேதி ராமகிருஷ்ணபுரம் பகுதியில் பாண்டியன் வீட்டில் திருடிய நகை எனவும் அதற்கு அடுத்த நாள் மார்ச் 14ஆம் தேதி கரூர் ஈரோடு ரோட்டில் உள்ள சோழ நகரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பவுன் ஒப்புக்கொண்டான்.
அதன் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்து அவளும் இருந்த 15 தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினார். இதை எடுத்து தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை வழக்கில் மேல் விசாரணைக்காக கரூர் நகர காவல் நிலையத்தில் அழைத்துவரப்பட்டு தொடர்விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சமன்பட்ட நபர் மீது பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு நாட்களுக்குள் இந்த வழக்கினை உண்மை குற்றவாளியை விரைவில் கைது செய்து திருட்டுப் போன நகைகளை முழுமையாக மீட்டர் டவுன் இன்ஸ்பெக்டர் தலைவிலான தனிப்படை போலீஸ்சாருக்கு மாவட்ட எஸ் பி சுந்தரபுரம் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)