Crime : 12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை.. பிறந்தநாளில் சோகம்.. என்ன நடந்தது?
கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சதா ரஹமத் (34). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். சுதா ரஹமத்துக்கு நேற்று பிறந்தநாள். இதனால் தனது பிறந்தநாளை கொண்டாட கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 5 மணியளவில் ஓட்டல் காவலாளி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பெண் மருத்துவர் சதா ரஹமத் என்பது தெரியவந்தது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், "பெண் மருத்துவர் சதா ரஹமத் பிறந்தநாள் அன்று குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. ஆனால் பெண் மருத்துவரான சதா ரஹமத் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. ஆனால் காரணம் சரியாக தெரியவில்லை. இது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
12-வது மாடியில் இருந்து பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime: வேறு பெண்ணுடன் தொடர்பு .. சண்டை போட்ட மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த பகீர் செயல்..
Crime: காதல் ஜோடி இடையே வெடித்த மோதல்.. காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை முயற்சி..!





















