Crime: காதல் ஜோடி இடையே வெடித்த மோதல்.. காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை முயற்சி..!
ஜம்முவில் மருத்துவராக பணிபுரிந்த பெண் ஒருவர் அவரது காதலனுடன் ஏற்பட்ட சண்டையில், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்முவில் மருத்துவராக பணிபுரிந்த பெண் ஒருவர் அவரது காதலனுடன் ஏற்பட்ட சண்டையில், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த காதல் ஜோடி இடையே ஒரு சிறிய பிரச்சனையால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது காதலியை சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்தியால் குத்தியுள்ளார். பின் அவரும் அதே கத்தியால் குத்திக்கொண்டார். தற்போது அந்த நபர் ஜம்முவில் இருக்ககூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மருத்துவர் ஜம்முவில் உள்ள தல்லாப் டில்லோவில் வசிக்கும் சுமேதா ஷர்மா என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் பாம்போஷ் காலனியில் வசிக்கும் ஜோஹர் கனாய் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். சில தனிப்பட்ட பிரச்சனைகளால் ஜோஹர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தகவல் கிடைத்ததும், ஜம்முவில் - ஜானிபூரில் உள்ள ஜோஹரின் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சுமேதா பிணமாக கிடந்துள்ளார். ஜோஹர் தனது வயிற்றில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். உடனடியாக இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் சுமேதாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜோஹர் கனாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜோஹர் மற்றும் சுமேதா இருவரும் காதலித்து வந்ததாகவும், ஜம்முவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS) படித்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. சுமேதா மேற்படிப்பிற்காக ஜம்முவை விட்டு வேறு மாநிலத்திற்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். சுமேதா மார்ச் 7 ஆம் தேதி ஹோலி பண்டிக்காக வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் அன்று அவர் ஜோஹர் வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜோஹர் சுமேதாவை கத்தியால் குத்தியுள்ளார். இரு வீட்டாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சட்ட நடைமுறைகளை முடித்துக் கொண்டு உயிரிழந்த சுமேதவின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Cyber Crime: பட்டதாரி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Crime : ஹோலி பண்டிகை கொண்டாட்டம்... புதுமண தம்பதி உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்...!
Crime: 1000 நாய்களை பட்டினிபோட்டு கொன்ற நபர்... காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..!