Crime: தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்; அதிமுக ஓன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு
ஆரணியில் தனியார் நிதி நிறுவனத்ததில் அத்துமீறி புகுந்து ஊழியரை தாக்கியதாக அதிமுக ஓன்றிய செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வேதபுரி ஈஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் அதிமுக ஓன்றிய செயலாளரும் மாவட்ட பண்டக கூட்டுறவு தலைவர் கஜேந்திரன் என்பவர் பதவி வகித்து வருகின்றார். இவர் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் குவாரி எடுத்து நடத்தி வருகின்றார். மேலும் ஆரணி டவுன் காந்தி ரோட்டில் டிஎன்சி என்ற தனியார் நிதி நிறுவனத்தில்; 25 லட்சம் ரூபாய் சீட்டு கட்டி வந்துள்ளதாகவும் சீட்டு சம்மந்தமாக கஜேந்திரன் என்பவரிடம் தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் கடந்த மாதம் சீட்டு பணம் கேட்க சென்றுள்ளதாகவும் வீட்டில் கஜேந்திரன் இல்லாத காரணத்தினால் வீட்டில் உள்ள நபர்களிடம் சீட்டு பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகின்றன. இதனையடுத்து நேற்று இந்த மாதம் சீட்டு பணம் அதிமுக ஓன்றிய செயலாளர் கஜேந்திரன் என்பவரின் குவாரியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வசூலிக்க சென்றுள்ளனர்.
கடந்த மாதம் சீட்டு பணம் பெறுவதற்கு வந்த ஊழியர்கள் யார் என்று கேட்டுள்ளதாகவும் இது சம்மந்தமாக தனியார் நிதி நிறுவன மேலாளர் வேலூரை சேர்ந்த சரணவன் என்பவரிடம் செல்போனில் பேசி ஆரணி கிளை அலுவலகத்திற்கு வருமாறு அதிமுக ஓன்றிய செயலாளர் கஜேந்திரன் கூறியதாக தெரிகின்றன. இதனை தொடர்ந்து நேற்று இரவு அதிமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் காந்தி ரோடில் இயங்கும் டிஎன்சி நிதி நிறுவனத்திற்கு சென்று வீட்டிற்கு வந்த ஊழியர்கள் யார் என்று கேட்டு தனியார் நிதிநிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தகவலிறந்து வந்த ஆரணி டவுன் போலீசார் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் குவிக்கபட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் அதிமுக ஓன்றிய செயலாளர் கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசார் முன்னிலையில் நிதி நிறுவன மேலாளர் சரவணன் என்பவரை சராமரியாக தாக்கினார்கள். பின்னர் ஆரணி டவுன் போலீசார் தனியார் நிதி நிறுவன மேலாளர் சரவணனை மீட்டனர். படுகாயமடைந்த சரவணன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவன மேலாளர் சரணவன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் அதிமுக ஓன்றிய செயலாளர் கஜேந்திரன் மற்றும் ஆதரவாளர்களான இளையராஜா, சக்தி, சரவணன், வேலு ,ஜெகன் உள்ளிட்ட 50-பேர் மீது கூட்டமாக வந்து அத்துமீறி தாக்கியது, கொலை மிரட்டல், ஆபாசமாகவும் அசிங்கமாகவும் திட்டுதல் உள்ளிட்ட 506(11), 447, 294(பி), 323, 147 உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணியில் தனியார் நிதிநிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை தாக்கிய அதிமுக ஓன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.