Crime: நடனமாட மறுத்த 10 வயது சிறுமி.. பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த இளைஞர்கள் - பீகாரில் கொடூரம்
திருமண விழாவில் நடனமாட மறுத்த 10 வயது சிறுமியை, இளைஞர்கள் 2 பேர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : திருமண விழாவில் நடனமாட மறுத்த 10 வயது சிறுமியை, இளைஞர்கள் 2 பேர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடனமாட மறுத்ததால் ஆத்திரம்
பீகார் மாநிலம் ஹாஜிபூர் என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, கடந்த புதன்கிழமை இரவில் திருமண விழாவில் பலரும் நடனமாடினார். அப்போது மண்டபத்தின் ஒரு பகுதியில் சில சிறுவர்களுடன் இரண்டு இளைஞர்கள் நடமாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு இருக்கும் ஒரு சிறுமியை நடனமாட வர வேண்டும் என்று 2 இளைஞர்கள் அழைத்தனர். அதற்கு அந்த சிறுமியானது மறுப்பு தெரிவித்துள்ளது. பலமுறை கூறியும் அந்த சிறுமி நடனமாட வராமல் இருந்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இதனையடுத்து அன்றைய நாளில் இரவு 7 மணியளவில் சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக மண்டபத்திற்கு பின்பக்கம் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள் அந்த சிறுமியை அருகில் இருக்கும் வயவெளிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
பின்பு, அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த அந்த சிறுமிக்கு மருத்துவனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு, 18 வயதான பிரசாந்த் குமார் மற்றும் 20 வயதான பிரதீக் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை தனிப்படை அமைத்து பீகார் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க