Crime : மார்பில் டாட்டூ.. விட்டுச்சென்றதால் ஆத்திரம்.. பகீர் திட்டம்.. காதலனால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..
பெங்களூருவில் 19 வயது மாணவி கல்லூரி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : பெங்களூருவில் 19 வயது மாணவி கல்லூரி வளாகத்திலேயே குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராஜன்குண்டே பகுதிக்கு அருகில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழக கல்லூரியில் 19 வயதான லயஸ்மிதா என்ற மாணவி முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். பவன் கல்யாண் என்பவர் அதே பகுதியில் உள்ள வேறு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், லயஸ்மிதாவும், பவன் கல்யாணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
காதலிக்காததால் ஆத்திரம்
இதனிடையே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லயாமிதா, பவன் கல்யாணிடம் பேசுவதை நிறுத்தி விட்டால். பின்னர், வேறொரு நபருடன் லயாமிதாவுக்கு பழக்கு ஏற்பட்டு, அந்த நபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பவன் கல்யாண் லயாமிதாவிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். அதற்கு லயாமிதா, எனக்கு உன்னை பிடிக்கவில்லை. என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
கோபமடைந்த பவன் கல்யாண் சம்பவத்தன்று லயாமிதாவின் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது லயாமிதாவிடம் 10 நிமிடம் பேசுவதாக கூறி, அவரை பவன் கல்யாண் சந்தித்தான். அப்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு பவன் கல்யாண் அவரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுத்த தெரிவித்த லயாமிதாவை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த லயாமிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
காதலி பெயரை பச்சைக் குத்திய காதலன்
இதனை அடுத்து, பவன் கல்யாணும் அதை கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்பு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது பவன் கல்யாணிடம் விசாரணை செய்ததில் அவர் சில தகவல்களை வாக்குமூலமாக கூறினார். அதன்படி, ” நாங்கள் இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளோம். ஆனால், சமீபத்தில் லயஸ்மிதா வேறொரு பையனை காதலிக்க தொடங்கினார். நான் பலமுறை முறையிட்டும் அவள் என்னை பிடிக்கவில்லை என்று கூறினார். கோபமடைந்த நான், லயஸ்மிதாவை கொலை செய்ய முடிவு செய்தேன். கடைசியாக அவளிடம் பேசச் சென்றபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில் நான் லயாமிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்தேன். நானும் லயாமிதாவின் பெயரை என் மார்பில் பச்சை குத்தினேன். பச்சை குத்திய அதே இடத்திலேயே கத்தியால் என்னையே குத்தினேன்” என்று பவன் கல்யாண் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் படிக்க





















