Crime: உறவினர்கள் கண்முன்னே.. 3 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம்!
ஹரியானா மாநிலத்தில் குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்களை மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: ஹரியானா மாநிலத்தில் குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்களை மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதனை தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீடு புகுந்த மர்ம கும்பல்:
ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்தது. இந்த கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக் கூடிய கூர்மையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு நுழைந்துள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதனால், அந்த மர்ம கும்பல் பெண்களின் வாய்களை கையினால் போத்திவிட்டு, மற்ற நபர்களின் கைகளை கட்டி சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன அவர்கள் சத்தம் போடாமல் இருந்துள்ளனர்.
பின்னர், அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களிடம் முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளனர். பின்னர், அந்த பெண்களிடம் தவறாக நடத்துக் கொண்டுள்ளனர். இதனால் அங்கிருந்த ஒரு பெண் சத்தம் போட்டுள்ளார். பின்னர், அவர்களையும் மிரட்டி, அந்த மர்ம கும்பல் குடும்பத்தினர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை:
அதன்பின், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் அந்த கும்பல் கொள்ளையடித்து ஓடியுள்ளதாக தெரிகிறது. அதாவது, கணவன் மனைவி வசித்து வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரை கடத்து முயன்றுள்ளது. அப்போது, அவரது மனைவி தடுக்க முயன்றுள்ளார்.
இதனால், அந்த குமபல் பெண்ணை தாக்கிவிட்டு கணவரிடம் இருந்த செல்போன், பணத்தை திருடியுள்ளனர். இதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க