Crime : இளம்பெண் பேச மறுத்ததால் ஆத்திரம்.. 51 முறை ஸ்க்ரூ ட்ரைவரால் குத்திக்கொன்ற கொடூரம்...என்ன நடந்தது...?
பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து ஸ்க்ரூ ட்ரைவரால் 51 முறை குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து ஸ்க்ரூ டிரைவரால் 51 முறை குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சட்டீஸ்கர் கார்பா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷ் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். நீல்குஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர்-கார்பா இடையே செல்லும் தனியார் பஸ்சில் பயணித்துள்ளார். அந்த பஸ்சில் நடத்துனரான ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். ஷபாஷ்கான் கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அதன்பின் நீல்குஷ் அவரிடம் பேசுவது இல்லை. மேலும் ஜாஷ்பூரில் ஒரு நபருடன் நீல்குஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஷபாஷ் கான் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் ராய்ப்பூர் வந்துள்ளார்.
51 முறை குத்திக் கொன்ற கொடூரம்
பின்னர் நீல்குஷ் வீட்டிற்கு ஷபாஷ்கான் சென்றுள்ளார். அங்கு தனியே இருந்த நீல்குஷ்சை 'ஸ்க்ரூ ட்ரைவரால்' சரமாரியாக குத்தினார். நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் 51 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நீல்குஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதன்பின் ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த கொடூர கொலையை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய ஷபாஷ் கானை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தார். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். அப்போது கௌதம் தன்னுடன் இரவு தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ரச்சனா மறுப்பு தெரிவித்ததால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியான கௌதமை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க
Crime : அதிர்ச்சி.. போதையில் வெடிகுண்டு மிரட்டல் ..! தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன..?