மேலும் அறிய
Advertisement
அச்சச்சோ.. பிறந்தநாளில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவன்..! காஞ்சிபுரத்தில் சோகம்..!
காஞ்சிபுரம் பகுதி சேர்ந்த கல்லூரி மாணவன் செங்கல்பட்டு பாலாற்றில் பிறந்தநாளன்று குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மகன் மோகன்ராம். இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இவருக்கு பிறந்தநாள். அதனை கொண்டாடும் விதமாக மோகன்ராம் தனது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி பாலாற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகன்ராம் மட்டும் திடீரென நீருக்குள் மூழ்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் மோகன்ராமை தேடி கண்டுபிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். அதன் பின்னர் மோகன்ராமின் நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மோகன்ராம் உயிரிழந்தது குறித்து, காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடை காலம் என்பதால் ஆற்றில் தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதற்காக ஆபத்தை உணராமல், உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதால் இது போன்ற சம்பவங்கள் வருடம் வருடம் நடந்து வருகிறது. இதுபோன்று சம்பவம் நடைபெறாமல் இருக்க முறையாக கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion