பணம் கேட்டு தாக்கப்பட்ட மருமகளின் கரு கலைப்பு - எஸ்கேப் ஆன மாமியார்.. சிக்கிய சின்ன மாமியார்!
மருமகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் மாமியார் முனியம்மாள்,சின்ன மாமியார் கிருஷ்ணவேணி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் குடும்ப சண்டையில் மாமியார் மருமகளை தாக்கியதில் கரு கலைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது . தலைமறைவான மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரத்தைச் வசந்தகுமார் (வயது27), ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக வேலை வருகிறார். இவரது மனைவி மோனிஷா (22). இவர்கள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மோனிஷா 3 மாத கர்ப்பமாக இருந்தார். Amazon | மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பு.. அமேசான் பொருட்களை அப்படியே லபக்க நினைத்த கும்பல்.. பரபர சேஸிங்..
இந்த நிலையில், கடந்த மாதம் வசந்தகுமாரின் தந்தை இறந்து விட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற காரிய நிகழ்ச்சிக்கு செலவான தொகையை கொடுக்கும்படி மோனிஷாவிடம் மாமியார் முனியம்மாள் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க மருமகள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாமியார், மருமகளுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, மாமியார் முனியம்மாள், நாத்தனார் லோகேஸ்வரி , சின்ன மாமியார்களான இந்திரா , கிருஷ்ண வேணி ஆகியோர் மோனிஷாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த மோனிஷா வலியால் அலறி துடித்துள்ளார். உடனே அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த, அக்கம் பக்கத்தினர் கர்ப்பிணி பெண்ணை மீட்டு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?
மருத்துவமனையில் மோனிஷாவை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில், மோனிஷாவின் கரு கலைந்து விட்டதாக அவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மோனிஷா கொருக்குப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நாத்தனார் லோகேஸ்வரி, சின்ன மாமியார் இந்திராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மருமகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் மாமியார் முனியம்மாள்,சின்ன மாமியார் கிருஷ்ணவேணி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். Joker Virus| ஆண்ட்ராய்ட் ஃபோன் யூசரா? ஜோக்கர் வைரஸால் இந்த பிரச்சனைகள்.. இந்த ஆப்ஸ் டெலீட் செய்யணும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்