நடத்தையில் சந்தேகமடைந்த கணவர்.. தீர்த்துக்கட்டி தற்கொலை என நடனமாடிய மனைவி!
சென்னை அரும்பாக்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்த கணவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மனைவி தற்கொலை என நாடகமாடியுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் 40 வயதான ஆனந்தகுமார். இவருக்கு 38 வயதான தனலட்சுமி என்ற மனைவியும் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது தனது கையில் கணவர் கத்தியால் வெட்டிவிட்டதாக கூறி தனலட்சுமி கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த தனலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே சிகிச்சையிலிருந்த தனலட்சுமி, தன் மீது தாக்குதல் நடத்திய கணவனை தீர்த்து கடட் வேண்டும் என்கிற வெறியில் இருந்தார். நேற்று காலை அரும்பாக்கம் காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமியிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து, இதுபற்றி ஆனந்தகுமாரிடம் விசாரிப்பதற்காக காவல்துறையினர் வீட்டிற்கு சென்றபோது தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய அவரது உடலை கீழே இறக்கி பார்த்துள்ளனர்.அப்பொழுது, அவரின் உடல் மற்றும் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தர்,பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவருடைய மனைவி தனலட்சுமியிடம் அரும்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எனது கணவர் ஆனந்தகுமார் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக வழக்கம்போல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது
என் கணவர் கத்தியால் எனது கையிலும் வெட்டினார்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நான், அங்கிருந்து வீட்டுக்கு வந்து இரும்பு கம்பியால் என் கணவரை ஆத்திரம் அடங்கும் வரை சரமாரியாக தாக்கினேன். இரத்த வெள்ளத்தில் இருந்த என் கணவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து குடும்பத்தகராறில் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி எனது உறவினர்களின் உதவியிடம் தூக்கில் தொங்கவிட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க : கர்ப்பமாக்கி தலைமறைவான மாணவர்: பெற்றோருடன் காதலன் வீட்டில் குடியேறிய கல்லூரி மாணவி!
கணவரை கொன்று தற்கொலை என்று நாடகமாடிய தனலட்சுமியை அரும்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தனலட்சுமி உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்