மேலும் அறிய

ஆபாசப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவர்.. கூலிப்படை வைத்து கொன்று புதைத்த 10ம் வகுப்பு மாணவிகள்!

செங்கல்பட்டில் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவரை, 10ம் வகுப்பு மாணவிகள் இருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 50 வயதான இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 20) சென்னை, கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பிரேம்குமார் அதே பகுதியில் உள்ள பிரவீன்குமார் என்ற 12ம் வகுப்பு மாணவருடன் சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த மர்மநபர்கள் பிரேம்குமாரை திடீரென தாக்கியுள்ளனர். மேலும், பிரேம்குமாரின் பைக்கையும், செல்போனையும் பறித்துக் கொண்டதுடன் அவரை கடத்தியும் சென்றுள்ளனர். இதைக் கண்டு பயத்தில் அலறியடித்துக்கொண்டே பிரேம்குமாருடன் சென்ற 12ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார் வீட்டிற்கு ஓடிவந்துள்ளான்.

ஆபாசப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவர்.. கூலிப்படை வைத்து கொன்று புதைத்த 10ம் வகுப்பு மாணவிகள்!

அங்கு தனது பெற்றோரிடமும், பிரேம்குமார் பெற்றோரிடமும் நடந்த சம்பவத்தை கூறியதுடன், பிரேம்குமாரை கடத்திச் சென்ற சம்பவத்தையும் கூறியுள்ளனர். இதனால், பிரேம்குமார் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்னர். மேலும், பிரேம்குமார் அவ்வப்போது வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் தொலைபேசியில் பேசி வந்ததையும் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதனால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் அந்த மாணவிகளின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறியதால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்னர்.

இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த இரு மாணவிகள், பிரேம்குமாரின் நண்பர் பிரவீன்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகள் அளித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரேம்குமாருக்கும் இந்த இரு மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாணவிகளையும் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்த பிரேம்குமார், மாணவிகளை மிரட்டியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இரண்டு மாணவிகளையும் மிரட்டி ரூபாய் 1.50 லட்சம் பணம் வரை மாணவிகளிடம் இருந்து பிரேம்குமார் பறித்துள்ளார்.

ஆபாசப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவர்.. கூலிப்படை வைத்து கொன்று புதைத்த 10ம் வகுப்பு மாணவிகள்!

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த சோழவரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக அசோக்கிடம் இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிகள், பிரேம்குமார் பற்றியும், பிரேம் மிரட்டி பணம் பறித்து வருவதையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அசோக் மாணவிகளிடம் பிரேம்குமாரிடம் நீ கேட்ட பணத்தை தருகிறோம். ரெட்ஹில்ஸ் டோல்கேட்டிடம் வந்துவிடு என்று சொல்லுமாறு கூறியுள்ளார். பணத்தை பெறுவதற்காக பிரேம்குமாரும், பிரவீன்குமாரும் சென்றுள்ளனர். ரெட்ஹில்ஸ் சென்ற பிரேம்குமாரிடம் மாணவிகள் என்ன உடை அணிந்து வந்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதை கேட்ட மாணவிகள் அசோக்கிடம் கூறியுள்ளனர். அதன்பின்புதான் பிரேம்குமார் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

ஆபாசப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவர்.. கூலிப்படை வைத்து கொன்று புதைத்த 10ம் வகுப்பு மாணவிகள்!

மேலும், கடத்திச் செல்லப்பட்ட பிரேம்குமாரை அசோக் உள்ளிட்ட கூலிப்படை கும்பல் 2 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. பின்னர், ஆந்திரா அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அருகே பிரேம்குமாரை கடத்திச் சென்று ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டுமேடு கிராமம் அருகே உள்ள ஏரியில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அங்கேயே பிரேம்குமாரின் உடலை புதைத்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை நடந்த இடத்திற்கு நேற்று மாணவிகள் இருவரையும், பிரேம்குமாரின் பெற்றோர்களையும், பிரவீன்குமாரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஏரிக்கரையில் வெட்டி புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். பின்னர், அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 15 வயதே ஆன மாணவிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவிகள் கூலிப்படையை ஏற்பாடு செய்து கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget