மேலும் அறிய
Advertisement
விழுப்புரம் பேருந்தில் நடத்துநர் கொலை! ஓடும் பேருந்தில் போதை ஆசாமியால் விபரீதம்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரத்தை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரத்தை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பொழுது மதுராந்தகம் புறவழிச்சாலையில் மதுபோதையில் பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.
மது போதையில் போதையில் பேருந்தில் பயணத்த படி நடத்துனரை ஒருமையில் திட்டியது மட்டுமில்லாமல் அவரை தாக்க முற்பட்டுள்ளார். சக பயணிகள் போதை ஆசாமியை தடுத்து நிறுத்தியும் தொடர்ந்து போதை ஆசாமி நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திடீர் என்று நடத்துனர் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தில் பயணித்த போதை ஆசாமி நடத்துனரை தாக்கியு
ள்ளார். போதை ஆசாமி நடத்துனரை தொடர்ந்து தாக்கியதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் உடனே நடத்துனர் மயக்கமடைந்த தொடர்ந்து அங்கு பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் உடனடியாக நடத்துனரை, மீட்டு அருகில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே நடத்துனர் உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுது காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த நடத்துனர் விழுப்புரம் பணிமனையில் பணிபுரிந்து வருவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் அவருடைய வயது 54 என தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய போதை ஆசாமியை காவல் துறை தீவிரமாக தேடி வந்தநிலையில், சூணாம்பேடு பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூணாம்பேடு பகுதியை சேர்ந்த அந்த நபர் போதையில் இருப்பதால் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி வருவதால், காவல்துறையினர், விசாரணையை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion