Crime : எனக்கே அட்வைஸா? தலைக்கேறிய போதை...! பெற்ற தாய்க்கு மகனால் நேர்ந்த கொடூரம்...!
பூந்தமல்லியில் மதுபோதையில் பெற்ற மகனே தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு வயது 24. இவரது தந்தை ஆனந்தன். தாயார் மல்லிகா. ஜெயபாலுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. மேலும், குடித்துவிட்டு முறையாக வேலைக்கும் செல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனால், ஜெயபாலை வேலைக்கு செல்லுமாறு அவரது தாயார் மல்லிகா அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரது அறிவுரையை கேட்காத ஜெயபால் தாய் மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், சண்டையில் ஈடுபட்டும் வந்துள்ளார். மேலும், நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று ஜெயபாலை தாய் மல்லிகா வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த ஜெயபால் தாய் மல்லிகாவுடன் சண்டையிட்டுள்ளார். பின்னர், ஜெயபாலின் தந்தை ஆனந்தன் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். ஆனாலும், ஜெயபால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், வெளியில் சென்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு தள்ளாடியபடியே ஜெயபால் வந்துள்ளார்.
மேலும் படிக்க : Chennai: அரை நிர்வாண வக்கீலின் ஸ்டார் ஓட்டல் ரகளை! விடிய விடிய மது பார்ட்டி.! பில்லுக்கு பணமில்லை.!
மேலும் படிக்க : அடுத்தவர் மனைவியுடன் சல்லாபம் - கையும் களவுமாக கணவனிடம் சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
குடித்துவிட்டு வந்த மகனைப் பார்த்த தாய் மல்லிகாவிற்கு மீண்டும் கோபம் வந்துள்ளது. இதனால், ஜெயபாலை கோபத்தில் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜெயபால் தாய் என்றும் பாராமல் அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மல்லிகாவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே சரிந்த தாய் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மல்லிகாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மதுபோதையில் பெற்ற மகனே தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Bank Fraud Cases India: ஏ.ஜி.பி. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியது ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















