மேலும் அறிய
சென்னை அருகே அதிர்ச்சி... திடீரென வந்த துப்பாக்கி தோட்டா... இளைஞர் காயம்..!
கட்டிட வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் காலில் துப்பாக்கி தோட்டா காலில் பட்டு காயம்.
![சென்னை அருகே அதிர்ச்சி... திடீரென வந்த துப்பாக்கி தோட்டா... இளைஞர் காயம்..! chennai near pallavaram youth doing construction work was injured in the leg by a gun bullet TNN சென்னை அருகே அதிர்ச்சி... திடீரென வந்த துப்பாக்கி தோட்டா... இளைஞர் காயம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/95001e0cfff2bf28bd7ea8ffb736da6d1674195649241109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காயமடைந்த இளைஞர்
துப்பாக்கி பயிற்சி செய்த போது குண்டு
சென்னை திரிசூலம், பெரியார் நகர் மெயின் ரோடு, போலீஸ் பூத் அருகே, வடமாநிலத்தை சேர்ந்த இன்ஸார் ஆலம் (27), என்பவர் சங்கர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் 2வது மாடியில் நேற்று கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது கணுக்காலிற்கு மேலே துப்பாக்கி தோட்டா பட்டு காயமடைந்தார். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது காலில் இருந்து அகற்றப்பட்ட தோட்டவை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் மீனம்பாக்கம் மலை பகுதியில் துப்பாக்கி சுடுதளத்தில் சிஐஎஸ்எப் போலீசார் துப்பாக்கி பயிற்சி செய்த போது குண்டு பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குண்டு ஒன்று திசை மாறி 2 கி.மீ. தூரம்
இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்ப்பு கொண்டு கேட்டபோது , திரிசூலம் பெரியார் நகரில் சங்கர் என்பவர் வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனிடையே திரிசூலம் மலைப்பகுதியில் சிஐஎஸ்எப் வீரர்கள் அனுமதி பெற்று துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது 2வது தளத்தில் தண்ணீர் ஊற்றும் பணியில் , ஈடுபட்டிருந்த தொழிலாளி இன்சர் அஸ்லம் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததுள்ளது . பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு ஒன்று திசை மாறி 2 கி.மீ. தூரம் கடந்து கூலி தொழிலாளி காலில் பாய்ந்ததில் காயம் ஏற்ப்பட்டது . இதனைத்தொடர்ந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த இன்சர் அஸ்லம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion