கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை! தற்கொலைகள்: அதிர்ச்சியில் உறைந்த சென்னை!
பிறந்தநாளின்போது மாணவியை லாட்ஜிக்கு அழைத்து , மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்.

கல்லூரி மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் அத்துமீறல்
சென்னை புளியந்தோப்பு சரக காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியை அதே கல்லுாரியில் படித்த மணி ( வயது 20 ) என்ற மாணவர் தன் பிறந்த நாளை கொண்டாட ரெட்டேரியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை மது அருந்த வற்புறுத்தி , பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின்படி செம்பியம் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து மணியிடம் விசாரிக்கின்றனர்.
கடுமையான வயிற்று வலி , தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்
சென்னை திருவொற்றியூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா ( வயது 21 ) செவிலியர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் , நேற்று முன்தினம் இரவு , மருந்து கடையில் மாத்திரை வாங்கி வருமாறு தாயை அனுப்பி வைத்தார். அவர் மாத்திரை வாங்கி வருவதற்குள், வீட்டின் மின்விசிறியின் தாயின் புடவையால் தூக்கிட்டு விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
சென்னை படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த நாகராஜன் மனைவி அனுசியா ( வயது 29 ) திருமணமாகி 11 ஆண்டுகளாகின்றன. இரு ஆண் , ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அறையில் அனுசியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாநகராட்சி ஊழியர் போல் நடித்து , கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
சென்னை சூளை ராகவா தெருவில் வசிக்கும் தேவகி ( வயது 80 ) என்பவர் வீட்டிற்கு 13 - ம் தேதி வந்த நபர், தன்னை மாநகராட்சி ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டார். வீட்டினுள் நுழைந்த அவர், கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் வளையல் , 3 சவரன் செயினை மூதாட்டியிடம் பறித்துச் சென்றார்.
வேப்பேரி போலீசார் விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ( வயது 30 ) மாநகராட்சி ஊழியர் போல் நடித்து , கத்தி முனையில் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 5 சவரன் நகையை மீட்டனர். வேலை இல்லாதது , தீபாவளி பண்டிகையை கொண்டாட பணம் இல்லாததாலும் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக அருண்குமார் தெரிவித்தார்.





















