மேலும் அறிய

பிறந்த நாளில் சோகம்: திருமணம் தள்ளிப்போன விரக்தியில் MBA பட்டதாரி தற்கொலையா? செங்கல்பட்டில் அதிர்ச்சி!

"செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில், இளம்பெண் திருமணமாகாத விரக்தியில் என் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது"

"திருமணம் ஆகாத விரக்தியில் இளம் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாளிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது."

திருமணம் ஆகாத விரக்தி

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கும் மகனுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், இளைய மகள் தீபிகா (28), எம்பிஏ (MBA) பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளாகத் தீவிரமாக வரன் தேடி வந்தும், பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்துள்ளது. 

இதனால் தீபிகா கடும் மன உளைச்சலிலும் விரக்தியிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபிகாவின் பிறந்த நாளான நேற்று, அவரது பெற்றோர் மகளுடன் கோவிலுக்குச் செல்வதற்காகப் பூஜை சாமான்களை வாங்கி வைத்துவிட்டுத் தயாராக இருந்துள்ளனர். அப்போது, குளித்துவிட்டு வருவதாகக் கூறி கழிவறைக்குச் சென்ற தீபிகா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இளம் பெண் தற்கொலை

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டியும் பதில் வராததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கழிவறையில் இருந்த ஷவரில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தீபிகா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், தீபிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது பிறந்த நாளிலேயே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget