மேலும் அறிய
Advertisement
சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம், ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியலில் வழிவிடுமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பெரிய வகை பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்படும். இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம்போல் பணியை துவங்கியபோது, மூலப்பொருட்கள் கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. இந்த நிலையில் குமார், பெரியசாமி, செல்வம் என்ற வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதும் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்த சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இதில் 4 நபர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பிடித்தவர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம், ஆலை உரிமையாளர் முருகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 நபர்கள் உயிரிழந்த நிலையில் வெடி விபத்தில் சிக்கிய 8 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.#Abpnadu | #Sivakasi
— Arunchinna (@iamarunchinna) January 1, 2022
| #FireAccident pic.twitter.com/cu61o7KGJA
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,” சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து நடத்திய விசாரணையில், ஆலையின் உரிமையாளர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விசாரணையின் அடிப்படையில் முழு தகவல் அளிக்கப்படும்” என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தேர்தங்கலை தேடி வந்த வெளிநாட்டு பறவைகள் - வேட்டையை தடுக்க வனத்துறை கண்காணிப்பு
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion